Saturday, October 21, 2017

 'மெர்சல்' - பா.. எதிர்ப்பு:


 'மெர்சல் - 2 '  திரைப்படத்திற்கு அடிக்கல் நாட்டுமா?


முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தை ஈர்த்தது.

"மெர்சல் படத்தில் வரும் gst , ரூபாய் நோட்டு விஷயத்தை ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும் அல்லது வசனத்தை நீக்க வேண்டும் . அதுவரை படத்துக்கு தடை கோரவேண்டும். தணிக்கை அதிகாரி சிந்திக்காமல் அனுமதித்துள்ளார் என்று பாஜகவுக்கு எழுதியுள்ளேன். பார்ப்போம் ."

மேலே குறிப்பிட்ட கருத்து தொடர்பாக, கீழ்வரும் கருத்தை நான் முகநூலில் பதிவு செய்தேன்.

“gst, ரூபாய் நோட்டு விஷயம் தொடர்பான தவறான தகவல் , மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தால்; இரண்டு பின் விளைவுகள் நடக்கலாம்.

மக்கள் மனதில் தவறான தகவல் என்று கேலி பேச, திரைப்பட தயாரிப்பாளர் தாமாகவே, அவை தொடர்பான காட்சிகளை நீக்கி விடுவார்; வர்த்தக ரீதியில் வெற்றி பாதிக்கக் கூடாது என்பதற்காக;

மக்கள் அந்த தவறான தகவல்களை வரவேற்று பாராட்டினால்

அந்த வரவேற்பானது, அந்த தகவல்களை சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டிய அரசின் துறைகளும், ஆளுங்கட்சியும் அந்த வேலையை சரியாக செய்யாமல், வேறு சொந்த வேலையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், என்ற சிக்னலாக அதை கருதி;

மக்கள் மனதில் சரியான தகவலை கொண்டு சேர்க்கும் புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து, செயலாற்ற வேண்டும்.

மாறாக, தமது ஆளுங்கட்சி பலத்தைக் கொண்டு மிரட்டி, அந்த காட்சிகள் நீக்கப்படுமானால்; (https://tamil.oneindia.com/news/tamilnadu/gst-punch-dialogues-will-be-cut-off-from-the-mersal-299007.html )

அதைவிட மக்களின் வெறுப்பை ஈட்டும் 'சிறப்பான வழிஇருக்க முடியாது

ஏனெனில், அதன்பின், சரியான தகவலை மக்கள் மனதில் கொண்டு சேர்க்கும் 'நியாய வலிமையை' (Moral Strength) இன்னும் இழந்து, கேலிக்கிடமான கட்சியாக பா.. மாறும் நிலையை தவிர்க்க முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் தொடர்பான, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பின், தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மனதில், நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருந்த மோடியின் மதிப்பானது, இன்று மிகவும் வீழ்ச்சியில் உள்ளதாகபாரபட்சமற்ற கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தினால், அதில் வியப்பில்லை.

சரியானாலும், தவறானாலும், மக்களை, அவர்களின் ரசனையை மதித்து, செயல்பூர்வமாக அவர்களை ஈர்ப்பதன் மூலமே, மக்கள் மனதில் உள்ள தவறுகளையும், 'திராவிட' அழுக்குகளையும் நீக்க முடியும்.

இன்றுள்ள மக்கள், குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும், வெறும் பேச்சை, எழுத்தை நம்பி ஏமாறாதாவர்கள் மட்டுமல்ல, அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த/வர முடியாமல் ஏமாந்த‌, கட்சிகளையும், தலைவர்களையும், சமூக வலை தளங்களில் கேலி பேசி மகிழ்ந்து வருபவர்கள் ஆவர்.

அவர்கள் மனதில் இடம் பெற வேண்டுமானால், செயல்பூர்வமாக பேசியே இடம் பெற முடியும்.

'மெர்சல்படத்திற்கு பா..கவின் எதிர்ப்பானது இலவச விளம்பரம் ஆகி விட்டது. பொதுவாக திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமற்ற நான், அந்த திரைப்படம் கூட்டம் குறைந்தவுடன், பார்க்க முடிவு செய்துள்ளேன்

மேலே குறிப்பிட்ட காட்சிகள் பா..கவின் அழுத்தம் காரணமாக நீக்கப்படுமானால், அந்த காட்சிகளும், அக்காட்சிகளை நீக்குமாறு பா.. தலைவர்கள் கொடுத்த அழுத்தமும், கேலியான முறையில், சமூக வலை தளங்களில் , அதீத வரவேற்புடன் வலம் வரும்.

கூட்டம் குறைந்து, நான் 'மெர்சல்திரைப்படத்தை பார்க்கும்போது, அக்காட்சிகள் நீக்கப்பட்டிருந்தால், நான் சமூக வலை தளங்களில் தேடி, அக்காட்சிகளை பார்க்க முயல்வேன்தமிழக பா.. தலைவரை சந்தித்த பின், எந்த காட்சியும், வசனமும் நீக்கப்படாது, என்று தயாரிப்பாளர் சார்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளதும், நல்ல அறிகுறியே ஆகும்.

‘'படம் முழுக்க தூவி இருக்கும் மருத்துவ அபத்தங்கள்' (https://www.facebook.com/senkottaisriram?hc_ref=ARRPLZ-lIaceUa8-ytjdsr-WGgQX8nSZ8YK9qSdqUU7_Ke0UlrQqjUxavVGhm-e8tBw&fref=nf) உள்ளிட்ட பல குறைபாடுகளும், 'தமிழர்' அடையாளத்தை முன் நிறுத்த அபத்தமான காட்சிகளும், 'மெர்சல்’ படத்தில் இருப்பதானது, இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளதுஜி.எஸ்.டி தொடர்பாக, 'மெர்சல்' வசன அபத்தங்கள் பற்றியும் வெளிவரத் தொடங்கியுள்ளன. (https://www.facebook.com/Sreepriya.Iyer/posts/10155351336792885)

 ஆனாலும் இப்படம் வெற்றி பெற்றதற்கான காரணங்களை ஆராயவும், நான் அப்படத்தை பார்க்க எண்ணியுள்ளேன்; காலனிய மனநோயும், திராவிட மனநோயும், 'ரசனைகளில்' ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிய, எனது ஆய்வின் தொடக்கமாக.(‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) 

1967க்குப் பின் அரங்கேறிய திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் கோவில்கள் கொலை, கொள்ளை கூடாரமாக மாறியதை,

1952இல் வெளிவந்த 'பராசக்தி' படத்தை ரசித்துதி.மு.கவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் எதிர்க்கவில்லையென்றால், அந்த 'பராசக்தி'-இன் ரசனையானது, தமிழ்நாட்டிற்கு பாதகமானதா? சாதகமானதாஅனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் கோரிக்கையை ஆதரிப்பவர்களில், அதே சமூகக் கேடான 'ரசனை' போக்கில் யார்? யார்? பயணித்து வருகிறார்கள்?
(http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_15.html

1944-இல் 'திராவிடர் கழகம்' மூலம், 'இனம்', 'சாதி' திரிந்து, திராவிடர்/திராவிட/தமிழர் அடையாளக் குழப்பமானது வளர்ந்த‌  போக்கில், அந்த சமூகக் கேடான‌ 'குருட்டுப் பகுத்தறிவு ரசனை' வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்ஒரு மனிதரின் சமூகத்தின் 'ரசனை' என்பதனாது, அவர்களின் வாழ்வியல் அடிப்படையில், அவர்களின் மனங்களில் உள்ள தேவைகள் (Needs) மற்றும் ஈடுபாடுகளுடன் (Interests)  தொடர்புடையதாகும்.

ஜி.எச்.டியானாலும், பெட்ரோல், டீசல் விலையானாலும், உலகில் மற்ற நாடுகளில், குறிப்பாக அண்டை நாடுகளில் உள்ள நிலையோடு ஒப்பிட்டு, மாணவர்களும், இளைஞர்களும் விவாதித்து, மோடி அரசு பற்றிய கருத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது.'

தமிழக பா..கவானது, தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்களைப் போலவே, 'பிரபாகரனை' போல, மோடியையும் பிம்ப சிறையில் அடைத்து, கருத்துரிமைக்கு எதிரான திசையில், 'திராவிட' கட்சிகளின் நோய்களில் சிக்கி பயணித்து வருவதை, ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

வேதங்களை எதிர்த்தும், கேலி கிண்டல் செய்தும் சமஸ்கிருதத்தில் வெளிவந்துள்ள நூல்கள் எல்லாம், தொன்மை இந்தியாவில் எந்த அளவுக்கு கருத்துரிமை இருந்தது? என்பதற்கான சாட்சியங்கள் ஆகும்

உலக வரலாற்றில் கிறித்துவ சர்வாதிகார ஆட்சிகளில் வெளிப்பட்ட போக்குகளை, இந்தியாவில் 'நுழைக்க' இந்துத்வாவில் உணர்ச்சிபூர்வமாக சிலர் முயன்று வருகிறார்கள்; அது போன்ற கருத்துரிமை தடையை எதிர்த்து வரும் ராஜிவ் மல்கோத்ரா போன்றோரின் எழுத்துக்களை எல்லாம் (https://rajivmalhotra.com/), அந்த கருத்துரிமை தடை கோருபவர்கள் எல்லாம் படித்தார்களா? என்ற கேள்வி எழும் வகையில்.

'மெர்சல்' போன்ற திரைப்படங்களில் அரசைப் பற்றி சரியாகவோ, தவறாகவோ, திரிந்தோ வெளிப்படும் தகவல்கள் எல்லாம், எந்த அளவுக்கு மக்களால் ரசிக்கப்படுகிறது? என்பதானது;

சமஸ்கிருத இலக்கியங்களில், அரசன் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும், 'விதூசகன்' பாத்திரத்திற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பானது உதவியது போலவே; (The Vidushaka in a way is the comic element in the play as he amuses everyone including the audience and not just the characters but at the same time offers valuable truths as well.; (https://solaceinfernweh.blogspot.sg/2017/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

திரைப்படங்களில் அரசை கேலி செய்து வெளிப்படும் காட்சிகள் எல்லாம்;

மோடி அரசு, நெருக்கடி கால இந்திரா அரசைப் போல ஏமாறாமல், ஆட்சியை திறம்பட நடத்த உதவும் விலைமதிக்க முடியாத 'சிக்னல்கள்' ஆகும்.

மக்களிடம் வரவேற்பு பெறும் திரைப்படங்களுக்கு, 'நெருக்கடி கால' காங்கிரஸ் கட்சியினரைப் போல, தமிழக பா.ஜ.கவானது, ஆளுங்கட்சியின் அதிகாரபூர்வமற்ற 'சென்சார்'களாக செயல்படுவதன் மூலம், தப்பித் தவறியும், தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து விடாமல் 'பாதுகாக்கும் சுவர்கள்' போன்று செயல்படுகிறார்கள்; அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்கும் பணியை செய்யாமல்; அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையே கேலிக்குள்ளாகும் வகையில்.

1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்தயவு தேவைப்படுகிறது.

அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு. மற்றும் ...தி.மு. ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற  முடியாதுதி.மு.கவின் வலைப்பின்னலானது, தி.மு. தலைவரின் உடல்நலக் குறைவின் காரணமாக, அவர் செயலிழந்து வரும் வேகத்திற்கு ஏற்றார்ப் போல சீர் குலைந்து வருகிறது. அந்த வலைபின்னலை, கட்சிக்குள் தடைகளின்றி,  'முழு அதிகாரத்துடன்'  செயல்படுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மக்கள் மத்தியில், குறிப்பாக கிராமப்புற பெண்கள் மத்தியில், பதவி சுகம் அனுபவிக்காமல், ஜெயலலிதாவை உண்மையாக நேசித்த, அடிமட்ட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில், எந்த அளவுக்கு செல்வாக்கு இருந்தது? என்ற தமிழ்நாட்டு பொதுமக்களின் கருத்துருவாக்க செயல்நுட்பம் பற்றிய புரிதலுக்கு முக்கியமான கேள்வியின் முக்கியத்துவம் அறியாமல்;

முதலமைச்சருக்கு சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் இருந்த கண்காணிப்பு, பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்து, போயஸ் கார்டன் கண்காணிப்பு கேமிராக்களைப் போலவே, ஜனநாயகத்தின் தூண்களும் செயல் இழக்க:

மேலே குறிப்பிட்ட ஜெயலலிதாவின் செல்வாக்கை ஈர்க்கும் சுயநல அரசியலுக்காக கூட, அப்போல்லோவில் ஜெயலலிதா சேர்ந்த நாள் முதல், அந்த 'மர்மத்தை'எதிர்க்காமல்;

மனித உரிமை, பெண்ணுரிமை அமைப்புகளைப் போலவே, தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், கமல்ஹாசன் போன்ற அரசியலுக்கு வர திட்டமிடும் நடிகர்களும், 'மெளன சாட்சிகளாக' பயணித்தார்கள். அரசியல் நீக்கத்தில் (Depoliticize), தலைவர்களை மட்டுமே ஆணிவேராகக் கொண்ட ஆதாய அரசியலின் அஸ்தமனத்தை முன்கூட்டியே கணித்து, செயல்பூர்வமாக மக்கள் மனதில் இடம் பெறும் அரிய‌ அரசியல் வாய்ப்பை இழந்தே, மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாம், தத்தம் 'புத்திசாலி'(?) கணக்கில் பயணித்தார்கள்.

சட்டங்களும் சம்பிரதாயங்களும் தமிழ்நாட்டில் கேலிக்கூத்தாகி விட்டதை பறை சாற்றும் வகையில்;

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்திய காட்சிகளையும்,

பின் ஊர்வலமாக வந்து, நிறைவேற்றிய இறுதி சடங்கு (?) காட்சிகளையும்;

தொடக்க காட்சியாக கொண்டு, அன்று முதல் இன்று வரை, தமிழ்நாட்டில் பொது அரங்கில் நடந்து வரும் கூத்துகளை ஆராய்ந்து, காட்சிகளை அமைத்து;

'மெர்சல் 2' திரைப்படத்தினை 'மெர்சல்' குழுவோ, அல்லது அதைப் போன்ற திறமையுள்ள வேறு குழுவோ உருவாக்கினால்;

அது உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற 'it’s a Mad Mad Mad World’ சாதனையை முறியடித்து;

சீனா, ஜப்பான் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வியாபார ரீதியில் உலக சாதனையை நிகழ்த்திய திரைப்படமாக அமையும், என்பதும் எனது கணிப்பாகும்.

‘சாதாரண மனிதர்களும் கூட பணத்தாசையில், நிலை தடுமாறும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படம் ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF )

நிகழ்கால தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்கள் எல்லாம், அவரின் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும், மரணத்திற்கும் உரிய விசாரணை கோராமல், மரணத்திற்குப் பின் சசிகலாவின் காலில் போட்டி போட்டு விழுந்ததும்;

பல கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் சசிகலாவை 'தரிசித்து' ஆதரவு தெரிவித்ததும், 'இந்தியா டுடே' உள்ளிட்ட ஊடகங்கள் கொடுத்த 'திடீர்' முக்கியத்துவமும்;

பின் சசிகலா சிறை சென்றதும், அவரை ஒதுக்கி ஆட்சியில் 'பலன்' பெற முயற்சிப்பதும்;

மேற்குறிப்பிட்ட 'திடீர்' முக்கியத்துவத்தின், 'திடீர்' மறைவும்;

அவரவருக்கு கிடைக்கும் ஆதாய அடிப்படையில், சசிகலா குடும்ப அரசியலை ஆதரித்தும், ஆதாயத்தை கூட்ட எதிர்த்தும், பின் அதிகரித்த ஆதாயத்தில் ஆதரித்தும், ஊடக எழுத்தாளர்களும், கட்சிகளின் தலைவர்களும் போடும்  'குட்டிக்கரணங்கள்';  

மேலே குறிப்பிட்ட பின்புலத்தில், தமிழ்நாட்டில் 'திடீர்' பணக்காரர்களுக்கு, அவர்களின் குடும்பத்திலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் கிடைக்கும் 'திடீர்' மரியாதை, 'திடீர்' பணக்காரர்களின் முதுகுக்குப் பின்னால், 'அதே' சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் 'கிசு கிசுக்கப்படும்' கிண்டல்கள், சசிகலா நாம் பணியாற்றும் சிறைக்கு வர மாட்டாரா? என்று சிறை அதிகாரிகள் ஏங்கும் காட்சிகள்(http://tamil.oneindia.com/news/india/there-are-5-rooms-prison-sasikala-prison-289858.html) உள்ளிட்ட இன்னும் பல சம்பவங்களை எல்லாம்;

நகைச்சுவை மிக்க மாலையாக கோர்த்து; 

இடையிடையே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் ஊழல்களையும், குறுக்கு வழியில் மதிப்பெண்கள் பெற்று மருத்துவர்கள் ஆவதையும், மருத்துவரின் கவனக்குறைவால்/மருத்துவ அறிவுக் குறைவால், நோயாளிகள் மரணமடைவதையும், மருத்துவமனைகளில் உள்ள பெயர்ப் பலகைகளில், மருத்தவரின் கல்வித்தகுதிக்கு அருகில், மருத்துவர் படித்த கல்லூரியின் பெயரையும் அச்சிட்டால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பு முடித்த மருத்துவர்களை நோக்கி, நோயாளிகள் குவிவதையும், கற்பனையாக நகைச்சுவை காட்சிகளாக்கி,

'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html & ‘கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html ) ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா? எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.. உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.’(http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html

'பொது அரங்கில், பிரச்சினைகளை கிளப்பி, இது போல ஆட்டங்கள்’ ஆடி, அடங்கிய போக்குகளில், பலன்கள் பெற்றவர்கள் யார்? யார்? பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? பொதுப்பிரச்சினைகளை வைத்து, பொது சொத்துக்களை சேதப்படுத்தியும், பொதுமக்களுக்கு ஊறு விளைவித்தும், 'ஆட்டங்கள்' ஆடி, சொத்து சேர்த்து வரும் 'பொதுவாழ்வு விபச்சாரிகள்' யார்? இது போன்ற 'விபச்சார தொழில்கள்' எப்போது முளை விட்டு, எப்படி  வளர்ந்துஇன்று என்ன நிலையில் உள்ளன?' என்பது போன்ற கேள்விகளை, சிம்புவின் 'பீப்' பாடல் தொடர்பான பதிவில் எழுப்பியிருந்தேன்.( http://tamilsdirection.blogspot.sg/2016/08/blog-post.html ) 'மெர்சல்' பிரச்சினையானது, அவை போன்ற கேள்விகளுக்கு விடைகள் கண்டு, பொதுவாழ்வு விபச்சார தொழில்களுக்கு முடிவு கட்டினால், அது தமிழ்நாட்டின் மீட்சிக்கும் துணை புரியும். (https://tamil.oneindia.com/news/tamilnadu/new-cinema-political-gossip-299220.html ) கருத்துரிமை ஆதரவாளர்கள் எல்லாம், இக்கேள்விகளை புறக்கணித்தால், அவர்கள் மீதும் 'பொதுவாழ்வு விபச்சாரமுத்திரை விழுவதை தவிர்க்க முடியுமா?

No comments:

Post a Comment