Monday, October 16, 2017

அனைத்து சாதியும் அர்ச்சகராகும் கோரிக்கையை கெடுப்பது (1);


'பார்ப்பன' ஆதிக்கமா? ஊழலின் ஆதிக்கமா? 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயா?



சமஸ்கிருதம்', 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்' போன்ற பிரச்சினைகள் தொடர்பாக நடந்து வரும் விவாதங்களில்;

தமிழ்நாட்டில் 'பெரியார்' ஆதரவாளர்களில் பலர் 'ஆதிக்கம்' என்ற சொல்லை, குழப்பமான புரிதலுடன் பயன்படுத்தி வருகிறர்களா?

என்ற கேள்வியானது, எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிகாரம் உள்ளவர்கள் தான், அதிகாரமற்றவர்கள் மீது  ஆதிக்கம் செலுத்த முடியும்.

செனோபோபியா நோயின் அறிகுறியாக (https://en.wikipedia.org/wiki/Xenophobia), வெறுப்பு அரசியலில், கடந்த கால அடிமைகளாகவும், நிகழ்கால மாற்றங்களை விளங்கிக் கொள்ளாமலும், அத்தகையோர் எல்லாம், 'ஆதிக்கம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் மீதுள்ள வெறுப்புக்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் உண்டு.

ஆங்கிலேயர் வருகைக்கு முன் கடந்த சுமார் 700 ஆண்டுகளாக தமிழ் நாடு தமிழரல்லாத கன்னட, தெலுங்கு, மராத்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது இசையில் தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. வழிபாட்டில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் இசையிலும் வழிபாட்டிலும் எந்த மொழித் திணிப்பையும் யாரும் ஆதரிக்கவில்லை. இசையிலும் வழிபாட்டிலும் தமிழ் தனக்கு உரிய இடத்தைப் பெறவில்லையென்றால் அதற்கு கடந்த 50 வருடங்களாகத் தமிழ்நாட்டை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்.’ ( http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கோவில்களில் பக்தர்கள் விரும்பினால், தமிழில் வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஏன் அதை பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை? அவை தவிர, சைவ மடங்களும், தமிழர்களாக உள்ள தனியார் வசத்திலும் பல கோவில்கள் உள்ளன?.அங்கெல்லாம் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது யார்? பெரும்பாலான தமிழர்களின் மூளைகளில் 'பக்தி' தொடர்பாக, என்னென்ன கருத்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?  'தமிழில் வழிபட்டால், வேண்டியதெல்லாம் கிடைக்கும்' என்று, ஒரு புரளியை வெற்றிகரமாக கிளப்பி விட்டால், தமிழர்களெல்லாம் தமிழில் வழிபட மாட்டார்களா? அப்படி தமிழில் வழிபட்டாலும், அதற்கு தமிழ் மீது உள்ள பற்று காரணமாகுமா? அல்லது 'அதிர்ஷ்டத்தின்' மீது உள்ள பற்று காரணமாகுமா?

ஆங்கிலத்தின் வல்லாண்மையையும், 'அதிர்ஷ்டத்தின்' வல்லாண்மையையும் தமது வாழ்வில் 'செயல்பூர்வமாக' எதிர்ப்பதே சரி; பேச்சுகளும், எழுத்துகளும் தமிழ்நாட்டில் தகவல் பரிமாற்ற வலிமையை இழந்துவரும் சூழலில்.’ (‘'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்விபுலானந்தர் படத்திறப்பு சரியா?’; http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

1980களிலேயே புதுக்கோட்டை பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பில் இருந்து நிறைய உதவிகள் செய்தஒருவர், புதுவீடு கட்டி, புதுமனை புகு விழா நடத்தினார்; சமஸ்கிருத மந்திரங்களை புரோகிதர் முழங்க, பசுமாடு ஒன்றினை புது வீட்டுக்குள் வலம் வரச் செய்து; அவ்வாறு செய்வதே 'அதிர்ஷ்டம்' என்ற, அவரது குடும்பத்தினரின் நம்பிக்கையில்

தமிழ்மொழி, இலக்கியங்கள் தொடர்பாக, தனது அறிவு வரை எல்லைகள்(intellectual limitations) பற்றிய புரிதலின்றி, 'பெரியார்' .வெ.ரா அவர்கள் பயணித்தது போலவே, 'சாதி ஒழிப்பையும்', 'அனைத்து சாதி அர்ச்சகராதல்' கோரிக்கையையும் குழப்பி, இன்று 'ஆதிக்கம்' என்ற சொல்லையும், 'பெரியார்' ஆதரவாளர்களில் பலர், குழம்பி பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

காலனிய சூழ்ச்சியில் சிக்கி, .வெ.ரா அவர்கள் 'சாதி' பற்றிய தவறான புரிதலில் பயணித்ததை, ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.htmlஅது போலவே, கோவில் கருவறை தொடர்பாகவும், அவர் தவறான உணர்ச்சிபூர்வ புரிதலில் பயணித்தாரா? என்ற கேள்வியையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன்.

சில வருடங்களுக்கு முன், புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்திற்கு சென்று, மலை மேல் உள்ள கோட்டையையும், அடுத்தடுத்து இருந்த, பிரமாண்டமான, ஒரே   மலையின் பக்கங்களில் இருந்த, குகை கருவறை உள்ளிட்ட, ‌சிவன், விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களுக்கானதனித்தனி கோவில்களையும் பார்த்து வியந்தேன்.

சீரங்கம் ங்கநாதரை விட, மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான கருவறையில்அனைவரும் அர்ச்சகர்  ‘அருகே’  நின்று வழிபட்டதானது,  'பெரியார்' கொள்கையாளனாக முன்பு பயணித்தஎனக்கு வியப்பானது. ;(  http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post_21.html )

காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் ஆலய கோவில் கருவறைக்குள், இந்து மத அனைத்து சாதி பக்தர்கள் எல்லாம், இன்று மலர்கள் தூவி வணங்கி வருகின்றனர். (‘the devotees went to the sanctum sanctorum of Kashi Vishwanath Temple and offered gulal and rose petals to the deities.’; https://ipfs.io/ipfs/QmXoypizjW3WknFiJnKLwHCnL72vedxjQkDDP1mXWo6uco/wiki/Kashi_Vishwanath_Temple.html  )

தமிழ்நாட்டில் சிற்றூர்கள் வரை வேகமாக பரவி வரும் 'ஆதி பராசக்தி' கோவில்களில், புரோகிதர், பூசாரியின்றி , இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதி பெண்களே அந்த பணிகளை செய்கிறார்கள்.

மேற்குறிப்பிட்டவைகள் மூலம் சாதி ஒழியவில்லை; சாதி தொடர்பான காலனிய சூழ்ச்சியில் அரங்கேறிய‌ சமூக செயல்நுட்பமும், இந்து மதத்தில் வழிபாடு தொடர்பான, பன்முகப் பின்னணியுட‌ன் பலவகைப்பட்ட‌ சமூக செயல்நுட்பமும், வெவ்வேறானவை என்ற பாடத்தை, பகுத்தறிவு உள்ளவர்களின் பார்வைக்கு வெளிப்படுத்தி.

கேரளாவில் நடைமுறைக்கு வந்துள்ள, அனைத்து சாதி அர்ச்சகராதல் நடைமுறையானது, தமிழ்நாட்டில் தாமதமாவதற்கு, மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலே காரணமா? என்ற கேள்வியானது;

அந்த கோரிக்கை தொடர்பான, நீதிபதி மகராசன் குழு அறிக்கையை படித்த போது, எனக்குள் எழுந்தது. (http://www.justicemaharajan.org/pdf/Archaka%20Committee%20Report,Maharajan%20Committee%20Report%20.pdf  )

தமிழ்நாட்டில் நான்கு வருணங்கள் இருந்ததில்லை; தமிழ்நாட்டில் சூத்திரர் என்று ஒரு வகுப்பு முன்னும் இருந்ததில்லை.இன்றும் இல்லை; இச்சொல் (சூத்திரர்) தமிழ்நாட்டில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு தான் வழக்கில் வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது, என்பதையும்;

வேத காலத்தில் கோவில் - புரோகிதர் வழிபாடுகள் இல்லை என்பதையும்;

பிராமணர்களில் ஒரு பிரிவினராகிய, ஐயர் மட்டுமின்றி, வைணவ பிராமணர்களிலும் பலர், சீரங்கம் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது என்பதையும்;

சிவாச்சாரியர்கள் அர்ச்சகர்களாக பணியாற்றும் சிவன் கோவில்களிலும், அய்யர், அய்யங்கார் உள்ளிட்ட பல பிரிவு பிராமணர்கள், கருவறைக்குள் நுழைய முடியாது என்பதையும்;

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? அந்த கோவில்களில் பிராமணரிலும், பிராமணரல்லாதோரிலும் அந்த பரம்பரை புரோகிதர்களைத் தவிர்த்து, அதே சாதிகளில் வேறு எவரும் கருவறைக்குள் நுழைய முடியாது என்பதையும்;

இராமநுசர் போன்ற சமய ஆச்சாரியார்களும், பிற்கால அரசுகளும் ஆகம சாத்திர அனுட்டானத்தில் பெரு மாறுதல்களையும் சீர்திருத்தங்களையும் செய்திருக்கிறார்கள், என்பதையும்;

புரோகிதர் தொழிலானது வசதி குறைவான வாழ்க்கைக்கு காரணமாகி(‘அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் பரிசு- தெலுங்கானா மாநில அரசு அறிவிப்பு; http://www.dinamalar.com/news_detail.asp?id=1877672 )

அந்த பரம்பரை குடும்பங்களில் பலர் படித்து வேலைக்குப் போகவும், கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கில், முறையாக பயிற்சி பெற்ற புரோகிதர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, என்பதையும் விளக்கி;

அந்த போக்கிலேயே, கிறித்துவ, முஸ்லீம் தூண்டல் மதமாற்றங்கள் மூலமாக சிக்கலையும் சந்தித்து வரும் இந்து மதத்தில்;

இந்துக்களுக்கு சாதி வேறுபாடு இன்றித் தீவிரமான பயிற்சி அளித்துக் கோயில்களில் பூசகர்களாக நியமிப்பது ஆகமத்திற்கு மாறுபட்டதாகும், என்று கருதுவதற்கு இடமில்லை;

பயிற்சி சம்பந்தமாக சேர்க்கை விதிகள், பயிற்சிப் பாடத்திட்டம், தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள் முதலான அனைத்து காரியங்களையும் நிர்வகிப்பதற்கு , அறநிலையத் துறை ஆகம சபை ஒன்றை நிறுவ வேண்டும்;

இப்போது பூசகராயுள்ளவர்களின் குடும்பங்களிலிருந்து வரும் மாணாக்கருக்கு கல்லூரிச் சேர்க்கையில் கூடுமானவரை முன்னுரிமை அளிக்க வேண்டும்;

என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை;

சிவாச்சாரியார்கள்,பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக பரிந்துரை செய்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட பரிந்துரைகளை சரியாக அமுல்படுத்தும் பொறுப்பானது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத் துறையைச் சார்ந்தது ஆகும்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிகள் எல்லாம் ஊழலில் சிக்கி தவிப்பதையும், வருமானத்திற்கு மேல் சொத்து சேர்க்கும் குற்றச்சாட்டுகளுக்கு துணை வேந்தர்கள் உள்ளாகி வருவதையும், ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

அப்படிப்பட்ட ஊழலில் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டில், பயிற்சி சம்பந்தமாக சேர்க்கை விதிகள், பயிற்சிப் பாடத்திட்டம், தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள் முதலான அனைத்து காரியங்களையும் நிர்வகிப்பதற்கு , அறநிலையத் துறை ஆகம சபை ஒன்றை நிறுவுவதும், அந்த ஊழல் வலையில் சிக்குவது சரியா?

இன்று ‘’பராசக்தி படம் வெளியானால், ‘கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது’ என மக்கள் அரசை வெளியேற்றுவார்கள் என பா.. தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவுத்துள்ள கருத்திற்கு, தமிழக மக்களிடையில் வரவேற்பிருந்தால் வியப்பில்லை. (https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-responded-p-chidambaram-on-mersal-issue/articlecontent-pf268634-299073.html )

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கை மேற்பார்வையிட்ட, இந்து அறநிலைய அதிகாரியும் நேர்மையானவருமான, சி.சுப்பிரமணியம் பிள்ளை கொலை தொடர்பான, பால் கமிசன் விசாரணை அறிக்கையில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஆளுங்கட்சியின் பிடியில் சிக்கி, கோவில்களில் உள்ள விலைமிக்க நகைகளும், பணமும் கொள்ளைக்குள்ளான போக்குகள் வெளிப்பட்டுள்ளன.(‘ Both the DMK and the AIADMK, professedly rationalists with no particular belief in temple rituals, have been in power continuously since 1967. In keeping with the spoils system prevailing in the country, both parties lost no time in packing temple trusts with their men as soon as they occupied Fort St George. Some of the temples in Tamil Nadu are known for their priceless collection of antique jewellery and precious stones.’ ; http://indiatoday.intoday.in/story/murder-or-sucide-judicial-inquiry-ordered-into-c.-subramaniam-pillais-death/1/401651.html )

திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடந்த இது போன்ற கொலைகளை உண்மையில் புரிந்தவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க ஆர்வமற்ற தமிழ்நாடும், இக்கொலைகளில் அரசு சாட்சிகளை அச்சுறுத்தி பிறழ் சாட்சிகளாக்கி விடுதலையான வி..பி(VIP)க்களை பாரபட்ச அணுகுமுறையில் 'நியாயப்படுத்தி' வருபவர்களும், அவைக்கேற்ற இயற்கையின் 'சாபங்களை' அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், தமிழ்நாடும் அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியுமாஉணர்ச்சிபூர்வ போக்கில் ஒன்றுபட்டுள்ள இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ளவர்கள், மேலே குறிப்பிட்ட பாரபட்ச போக்கிலும், ஒன்றுபட்டுள்ளார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. (http://tamilsdirection.blogspot.sg/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html )

கடவுள் நம்பிக்கையுள்ள பிராமண, பிராமணரல்லாதோர் அடங்கிய நீதிபதி மகராசன் குழு அறிக்கையை முழுவதும் படிப்பவர்களுக்கு;

அந்த பரிந்துரைகளை நேர்மையாக அமுல்படுத்த வேண்டுமானால்;

அதற்கு முன்நிபந்தனையாக, இந்து அறநிலையத்துறையை ஊழல் ஆதிக்கத்தின் வலைப்பின்னலில் இருந்து அகற்றினால் மட்டுமே சாத்தியம் , என்பதும் தெளிவாகும்.

இல்லையென்றால் ஊழல் வலையில், அறநிலையத் துறை ஆகம சபை சிக்கியே, மகராசன் குழு பரிதுரைகள் அமுலாகி சீரழியும்..

கேரளாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ரேசன் கடைகளில் ஊழல் கிடையாது. தெருவில் புதிதாக தார் சாலை அமைக்கும்போது, வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்து, அதை கண்காணித்து, ஊழலின்றி ஒழுங்காக, மழை காலத்தில் வீணாகாத, சாலைகள் போடப்படுவதை உறுதி செய்கிறார்கள். உலகத்திலேயே டிஜிட்டல் யுகத்தில், சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக, ஜனநாயகத்தின் தூண்களை முட்டாளாக்க, ஒரு முதலமைச்சரே மர்மமான முறையில் மருத்துவ சிகிச்சை மூலமாக மரணத்தில் முடிந்த சாதனை(?)யானது, கேரளாவில் நடக்க வாய்ப்பே கிடையாது1944இல் 'பெரியார்' .வெ.ரா திராவிடர் கழகத்தை தொடங்கியிருக்காவிட்டால், தமிழ்நாடும் இன்று அந்த வெட்கக்கேடான சாதனையையும் சந்தித்திருக்காது

'இட ஒதுக்கீடுமூலம்தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத‌, 'தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்திருக்காது. (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

தமிழ்நாட்டில் ஊழல் ஆதிக்கத்தின் பல பரிமாண பாதிப்புகளை எல்லாம் விளங்கிக் கொள்ளும் பகுத்தறிவின்றி, 'திராவிட' ஊழல் ஒட்டுண்ணிகளான‌ 'பெரியார் சமூக கிருமிகளை' உருவாக்கிய‌ குருட்டுப் பகுத்தறிவில் பயணிக்கும், கடவுள் நம்பிக்கையில்லாத‌ 'பெரியார்' கட்சிகள், 'அனைத்து சாதி அர்ச்சகராகும்' கோரிக்கையை  ஆதரிப்பது என்ற பெயரில், கெடுத்து வருகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை ஆதரித்துள்ள நிலையில் ; (https://timesofindia.indiatimes.com/india/RSS-for-Dalit-head-priests-in-temples/articleshow/238039.cms  & http://www.thehindu.com/news/cities/chennai/not-against-nonbrahmins-becoming-priests-says-rss-state-president/article7839676.ece )

சில பிராமணர்கள் ஒரு கோரிக்கையை எதிர்ப்பதை முன்னிலைப்படுத்தி, அக்கோரிக்கையை ஆதரிக்கும் பிராமணர்களையும் வெறுத்து ஒதுக்கி, 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா'வில் அந்த கோரிக்கையை சிக்க வைப்பதானது;(https://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2017-10-05T08:09:00-07:00&max-results=7 )

அந்த கோரிக்கை அமுலாககடவுள் நம்பிக்கையுள்ள பிராமண, பிராமணரல்லாதோரின் ஒற்றுமையோடு இயல்பாக, அக்கோரிக்கை நிறைவேறுவதை, அது கெடுப்பதாகாதா?

கேரளாவில் அந்த ஒற்றுமையை சீர்குலைத்து அந்த ஒற்றுமையை கெடுக்காததே, இந்துத்வா பிரிவுகளின் ஆதரவோடு, அந்த கோரிக்கையானது நிறைவேறியதற்கு முக்கிய காரணமாகும்.

அனைத்து சாதிகள் அர்ச்சகராகும் கோரிக்கை தொடர்பாக, ஆர்.எஸ்.எஸும், பா..கவும், மோடியும் செயல்பூர்வமாக வெளிப்படுத்திய சாதனைகளை விளக்கியுள்ள கட்டுரை: https://swarajyamag.com/politics/dalit-priests-are-a-welcome-development-but-what-did-marxists-have-to-do-with-it

ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது தாய்மொழி தமிழ்வழிக் கல்வியை ஆதரித்து செயல்பட்டு வரும் சூழலில்; (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

தமிழ்நாட்டில் அந்த கோரிக்கையில் வெளிப்பட போகும் ஒற்றுமையானது;

தமிழ்நாட்டை சீரழித்த திராவிட அரசியல் ஊழல்களை எதிர்க்காமலும், 'பெரியார் தந்த புத்தியில்' அந்த ஊழல்களுக்கு பாதுகாப்பு கவசங்களாகவும், பயணித்து வரும் 'பெரியார்'  கட்சிகள் இனி தொடர்வது, தமிழ்நாட்டிற்கு சாதகமா? அல்லது பாதகமா? என்ற கேள்வியை எழுப்பினால் வியப்பில்லை

திராவிட அரசியல் ஊழல் கொள்ளையர்களின் சகவாசத்தில், குருட்டுப் பகுத்தறிவும் சேர்ந்து சமூக வேதியல் வினை (Socio-Chemical reaction) மூலமாக, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவானார்கள், என்பதும் எனது சமூகவியல் ஆய்வு முடிவாகும்.( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.htmlஅந்த சமூக வேதியல் வினை மூலமாகவே, அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து, 'பெரியார்' கட்சிகள் எல்லாம் மரணப் போக்கில் பயணிக்கின்றன, என்பதும் எனது கணிப்பாகும்

தமிழ்நாட்டில் சமூக ஆற்றல் ரத்த ஓட்டமானது, சமூகக் கேடான சமூக வேதியல் வினை மூலமாக, சமூக இழைகளையும், பிணைப்புகளையும் கெடுத்து, இயல்பில் திரிந்தவர்களையும், பலகீனமானவர்களையும் கொண்டகட்சி, குடும்பம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் 'லாப நட்ட கள்வர் நோயில்' சிக்க வைத்தது தொடர்பான, எனது ஆய்வுகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html ) மீட்சிக்கு வாய்ப்பற்ற அந்த அமைப்புகளும், 'கள்வர்' தமிழர்களும், சருகாகி, உதிரும் போக்கும் தொடங்கி விட்டது. திருக்குறள் (350)  வழியில், நாம் அத்தகைய அமைப்புகளையும், மனிதர்களையும் ஒதுக்குவதன் மூலமே, தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்க முடியும்.

7 comments:

  1. //ஆங்கிலேயர் வருகைக்கு முன் கடந்த சுமார் 700 ஆண்டுகளாகதமிழ் நாடு தமிழரல்லாத கன்னட, தெலுங்கு, மராத்தியமன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது இசையில்தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கேமுக்கியத்துவம் தரப்பட்டது. வழிபாட்டில் சமஸ்கிருதத்திற்குமுக்கியத்துவம் தரப்பட்டது.//
    தெலுங்கு,கன்னடம்,மராத்தி சரி சமஸ்கிருதம் எப்படி முக்கியத்துவம் பெற்றது? என்பதற்கான விளக்கம் எதுவும் உள்ளதா. சங்க காலத்திலும்,தொல்காப்பியத்திலும் சமஸ்கிருதக்கலப்பு உள்ளதாக கூறப்படுகிறதே.

    //தமிழ்மொழி, இலக்கியங்கள் தொடர்பாக, தனது அறிவு வரைஎல்லைகள்(intellectual limitations) பற்றிய புரிதலின்றி, 'பெரியார்'ஈ.வெ.ரா அவர்கள் பயணித்தது போலவே, 'சாதி ஒழிப்பையும்', 'அனைத்து சாதி அர்ச்சகராதல்' கோரிக்கையையும் குழப்பி, இன்று'ஆதிக்கம்' என்ற சொல்லையும், 'பெரியார்' ஆதரவாளர்களில் பலர்,குழம்பி பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.//

    நான் புரிந்துகொண்டவரை சமூகத்தை பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்து வருவதாகவும்,இங்கு பார்ப்பனர் – பர்ப்பனரல்லாதவர் என்கிற பாகுபாடு பிரதானமாக நிலவுவதாகவும் கருத்துரைக்க இந்த பிரச்சினையை பயன்படுத்திவருகிறார்கள். கேரளாவில் வந்த மாற்றம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது எனலாம்.


    //தமிழ்நாட்டில் சிற்றூர்கள் வரை வேகமாக பரவி வரும் 'ஆதிபராசக்தி' கோவில்களில், புரோகிதர், பூசாரியின்றி , இந்து மதத்தில்உள்ள அனைத்து சாதி பெண்களே அந்த பணிகளை செய்கிறார்கள்.//

    இதில் விடுபட்ட முக்கிய செய்தி, மாதவிலக்கு உள்ள பெண்களும் கருவறையில் பூசை செய்யலாம் என்பது.

    ReplyDelete
    Replies
    1. தொல்காப்பியத்தில் வடமொழி உள்ளிட்ட பிறமொழி சொற்களை தமிழில் இறக்குமதி (import) செய்வது தொடர்பான, மொழியியல் சூத்திரமானது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால்,'சமஸ்கிருதக் க‌லப்பு' என்ற கருத்தானது, அரங்கேறியுள்ளது. கூடுதல் விளக்கத்திற்கு: http://www.musicresearch.in/categorydetails.php?imgid=83

      ஐரோப்பாவில் பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் எல்லாம் லத்தீன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின், அங்கு லத்தீன் மொழி மீது உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோய் வளரவில்லை. இன்றும் லத்தீனின் அறிவு செல்வமானது போற்றப்படுகிறது. இந்தியாவிலும், கம்போடியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரசு ஆதரவுடன் செல்வாக்கில் இருந்த சமஸ்கிருதத்தின் மோகத்திலிருந்து, அந்தந்த பகுதி மொழிகள், ஐரோப்பாவைப் போல, மீண்டு வளர்ந்து வருகின்றன, சமஸ்கிருதத்தின் மீது உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோய் வளராமல்; தமிழ்நாட்டைத் தவிர.

      அனைத்து சாதி அர்ச்சகராவதன் மூலம் சாதி ஒழியும், என்று 'பெரியார்' ஈ.வெ.ரா பேச்சுக்களிலும், பின்பு வந்த 'பெரியார்' கட்சி தலைவர்கள் பேச்சுக்களிலும் படித்த ஞாபகம் இருக்கிறது. மீண்டும் எனது பார்வைக்கு அவை வரும்போது, தெரிவிக்கிறேன்.

      Delete
    2. 'தொல்காப்பியத்திலும் சமஸ்கிருதக்கலப்பு உள்ளதாக கூறப்படுகிறதே' தொடர்பாக:

      தமிழ் உள்ளிட்ட மொழிகளில், சொற்களின் தோற்றம் பற்றி,மொழியியல் சமூக செயல்நுட்பப் பின்னணியில் (Sociological Linguistics Mechanism) , தொல்காப்பியம் விளக்கியுள்ளதானது, இசை மொழியியல் (Musical Linguistics) பற்றிய எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. மொழியில் வளரும் குறைபாடுகளுக்கும், சமூகத்தில் வளரும் குறைபாடுகளுக்கும் இடையிலான உறவு பற்றிய மொழியியல் சமூக செயல்நுட்பத்தை விளங்கிக் கொள்ளாமல், தனித்த‌மிழ் இயக்கங்கள் பயணித்ததன் விளைவாக, இன்று அந்த இயக்கங்களின் குடும்பப் பிள்ளைகளிலும், சரளமாக தமிழில் எழுத படிக்க தெரியாத தமிங்கிலீசர்களாக எவ்வளவு பேர் வளர்ந்து வருகிறார்கள்? என்பதையும் ஆய்வு செய்து வருகிறேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html )

      Delete
    3. ஒரு மனிதரின், சமூகத்தின், அகச்சீரழிவின் வெளிப்பாடே புறச் சீரழிவு ஆகும். சமூக மொழியியல் அறிவுபூர்வ போக்கை விடுத்து, உணர்ச்சிபூர்வமாக புறச்சீரழிவை முன்னிலைப்படுத்திய 'தனித்தமிழ்' போக்கானது, அகச்சீரழிவுக்கு பாதுகாப்பு கவசமாகி,அகத்தில் சீரழிந்த தலைவர்களையும் அம்பலமாகாமல் காப்பாற்றி, தமிழையும், தமிழர்களையும் மேலும் சீரழித்து, தமிங்கிலீசர்களின் வளர்ச்சிக்கு காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

      Delete
  2. //ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை ஆதரித்துள்ள நிலையில் //

    2006ல் உள்ள செய்தியை ஆதாரமாக குறிப்பிட்டு உள்ளீர்கள், இது வரவேற்கவும் பாராட்டக்கூடியதுதான். தற்பொழுது கேரளாவில் வந்துள்ள மாற்றத்தை இந்திய அளவிலோ,கேரள தமிழ்நாடு அளவிலோ இந்து அமைப்புகள் வரவேற்றுப் பாராட்டி இருக்கிறார்களா. முத்தலாக் க்கு காட்டிய ஆர்வத்தை தன்னுடைய மதத்திற்கு பிரதமர் காட்டாமல் இருப்பது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை அவர்கள் தரப்பில் தெரிவிப்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. அனைத்து சாதிகள் அர்ச்சகராகும் கோரிக்கை தொடர்பாக, ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும், மோடியும் செயல்பூர்வமாக வெளிப்படுத்திய சாதனைகளை விளக்கியுள்ள கட்டுரை: https://swarajyamag.com/politics/dalit-priests-are-a-welcome-development-but-what-did-marxists-have-to-do-with-it

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete