Tuesday, January 17, 2017

துணிச்சலுடன் அறிவுபூர்வமாக விவாதிக்கும் நோக்கில்;


சசிகலாவின் தம்பி திவாகரனும், கணவர் நடராஜனும், பொது அரங்கு விவாதத்திற்கு முன் வந்துள்ளதை வரவேற்கிறேன்


ஜெயலலிதா உயிருடன் இருந்தது வரை, வெளிப்படுத்தாத தமது கருத்துக்களை, சசிகலாவின் தம்பி திவாகரனும், கணவர் நடராஜனும் இப்போது ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

என்ற கேள்வியை, நான் கேட்க விரும்பவில்லை.

மாறாக, இப்போதாவது, துணிச்சலுடன் அறிவுபூர்வமாக விவாதிக்கும் நோக்கில், பொது அரங்கிற்கு அவர்கள் எல்லாம், வந்துள்ளதாக கருதி, வரவேற்கிறேன்.

‘இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல." என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். (http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-brother-divakaran-slams-centre-271865.html )

மேலே குறிப்பிட்ட திவாகரனின் கருத்தை, நடராஜனும் கீழ்வருமாறு வழி மொழிந்துள்ளார்.

“Saffron forces are trying to create a conflict between Aryans (Brahmins) and Dravidians (non-Brahmins) in the State. These forces are attempting to create a rift in Tamil Nadu that now is a haven of peace.”

மேலே குறிப்பிட்டுள்ள 'ஆரியர் - திராவிடர்' தொடர்பாக; நான் 12 டிசம்பர் 2016இல் வெளியிட்டுள்ள;

'தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில்:  'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா?'

என்ற தலைப்பிலான பதிவினையும், அதிலுள்ள கீழ்வரும் பகுதியையும், அவர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

‘ஏற்கனவே 'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிகரித்து வரும் சூழலில் (http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html   );

ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எல்லாம், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில், கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வரும் சூழலில்,

2G ஊழல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை பாதுகாக்கவும், சசிகலாவை பாதுகாக்கவும்;

தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள், அத்தகையோருக்கு உதவ முற்படுவதும், அதன் விளைவுகளை சந்திப்பதும் அவரின் உரிமையே என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த முயற்சியில், கொள்கை போராட்டம் அடிப்படையில், 'ஆரிய - திராவிட' மோதல் கவசத்தை கையாளுவதானது, அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டிய 'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை;

தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில், கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா?’

தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்டு, 'பெரியார்' கட்சிகளில் இருந்து,  மேற்குறிப்பிட்ட எனது பதிவு தொடர்பாகவும், கடந்த சுமார் 10 வருடங்களுக்கு மேலாக, நான் 'பெரியார்' கொள்கைகள் தொடர்பாக வெளியிட்டு வரும் ஆய்வு முடிவுகள் தொடர்பாகவும், இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்று, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடன் பரிசீலித்து, உரிய சான்றுகளின் அடிப்படையில் தவறு ஏதும் வெளிப்பட்டால், ஈ.வெ.ரா அவர்கள் வழியில்,அதை பகிரங்கமாக அறிவித்து, நன்றியுடன் என்னைத் திருத்திக் கொள்வேன்.

சசிகலாவின் தம்பி திவாகரன், கணவர் நடராஜன் ஆகியோரிடமிருந்தும் மறுப்பு வெளி வருவதை, நான் வரவேற்கிறேன். 

இல்லையெனில், குறைந்த பட்சம் அவர்கள் எல்லாம் 'ஆரியர் - திராவிடர்' என்று பேசுவதை நிறுத்திக் கொள்வதானது;

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கேலிப் பொருளாகும் அபாயத்திலிருந்து, அவர்களைக் காப்பாற்றும். அதில் தவறி, கேலிப்பொருளான பின், சமூக வலை தளங்களிலும், பள்ளி கல்லூரி மேடை நிகழ்ச்சிகளிலும், சிரிப்புக்கான கருப்பொருள் சுரங்கத்தில், இடம் பெறுவதை தவிர்க்க முடியாது.

அடுத்து ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை தொடர்பாகவும், மரணம் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்புபவர்கள் தொடர்பாக;

 'அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன்' என்று சசிகலாவின் கணவர் சூளுரைத்துள்ளதையும், நான் வரவேற்கிறேன்.

“இன்று அவர் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். வெட்கமாக இல்லையா, என அவர்களை கேட்கிறேன். இந்த விஷமத்தை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன்.” - சசிகலாவின் கணவர் நடராஜன்

வரவேற்க வேண்டிய திரு.நடராஜனின் அந்த பணிக்கு துணை புரியும் வகையில், அவர் விளக்கம் தர வேண்டியவை பற்றியும், எனது பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். அதிலுள்ள கீழ்வரும் பகுதி, அவரின் கவனத்திற்கு உரியவை ஆகும்.

‘ஜெயலலிதாவை கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற 'தெகல்கா' இதழில் வெளிவந்த; (Was Sasikala Giving Slow Poison To Jayalalithaa, Tehelka Report Says So; http://www.indiatvnews.com/news/india/was-sasikala-giving-slow-poison-to-jayalalithaa-tehelka-report-says-so-13994.html  ) செய்தியானது, தமிழ் மட்டுமே தெரிந்த, ஜெயலலிதாவின் விசுவாசிகளின் பார்வைக்கு போகமல் இருந்திருக்கலாம்.

ஆனால் ஜெயலலிதா இன்றைக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;

ஜெயலலிதாவின்  விசுவாசிகளிடம் வெளிப்படும் எதிர்ப்பை, தமக்கு ஒத்து வரும் மீடியாக்களின் துணையுடன் இருட்டில் வைத்தாலும், வரும் உள்ளாட்சி தேர்தல்களில், சட்டசபை இடைத்தேர்தல்களில்,  அதன் விளைவை, சந்திப்பதிலிருந்து தப்ப முடியுமா?

'அதே போல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது, ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்ததாக, 'சசிகலா' மீது குற்றம் சுமத்திய செய்தியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த செய்தி வந்தவுடன், அது எவ்வளவு பெரிய சமூக குற்றம்? என்பதை சசிகலாவின் உறவினர்களில், நண்பர்களில் எவராவது உணர்ந்து, அதனை சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்களா? இல்லையா? அந்த சமூக குற்றத்தை பற்றி, எந்த கட்சித் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்தார்களா? அவ்வாறு கண்டித்திருந்தால், தனது அத்தை முகத்தை உயிரோடு மருத்துவமனையில் ‍‍ 74 நாட்கள் இருந்த‌போதே பார்க்க முடியாத நிலைமை, அந்த பெண்ணுக்கு வந்திருக்குமா?”
( ‘முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும் மரணமும்; சட்டமும், சமூக நெறிகளும் பற்றிய அபாய எச்சரிக்கைகள்; http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html)

ஒரு மாநில முதல்வர் என்பவர் உடல் அளவிலும், மனதளவிலும் முதல்வருக்கான பொறுப்புகளை நிறைவேற்ற தகுதியானவர் என்று ஆளுநர் திருப்தியில் உள்ளவரை தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.

சம்பிரதாயங்களுக்கும், சட்டத்திற்கும், அல்லது ஈ.வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய 'பகுத்தறிவு'க்கும், அப்பாற்பட்டு, அதிகார வழிபாட்டு போக்கில், சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை இழந்த திசையில், தமிழ்நாடு பயணிக்கிறதா? அது திராவிட அரசியலின் சாதனையா?  அது எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்ற கேள்விகளை, எவ்வளவு காலம் தான் இருட்டில் வைக்க முடியும்? ( ‘- விஜயகாந்த் வழியில் சசிகலா ‍ நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2016/12/depoliticize.html ) “ என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயலலிதா மூலம் சதி பழிக்குள்ளாகி, மன்னிப்பு மூலம் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்ட சசிகலா போல, எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்து, எம்.ஜி.ஆரால் எந்த பழிக்கும் உள்ளாகாத ஜானகி எம்.ஜி.ஆரை, கட்சித்தலைவர்கள் தத்தம் சுயநலன்களுக்காக முதல்வராக்கி, பின் சட்டசபை தேர்தலை சந்தித்த போது, டெபாசீட் கூட வாங்க முடியாமல் தோற்று, அவமானத்திற்குள்ளாகி, அரசியலில் இருந்து ஒதுங்கியது, எதை உணர்த்துகிறது? ‘ ; (  http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post.html )

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை தொடர்பாகவும், மரணம் தொடர்பாகவும், சசிகலாவின் கணவர் நடராஜன் "ஊர், ஊராக சென்று" விளக்கம் தரப் போவதை, நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

அவர் தரும் விளக்கத்தில், மேலே குறிப்பிட்ட சந்தேகங்களை அவர் தெளிவு படுத்துவார், என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு தெளிவுபடுத்துவதில் தாமதமோ, தோல்வியோ ஏற்படுமானால், பாரபட்சமற்ற விசாரணைக்கான அழுத்தமானது, பொதுமக்களிடமிருந்தும், ஜெயலலிதாவின் அடிமட்ட ஆதரவாளர்களிடமிருந்தும், 'சுனாமி' போல் வலிவடையும் காலமானது, அதிக தொலைவில் இல்லை.

அது தொடர்பாக, மத்திய அரசோ, நீதி மன்றமோ பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்திரவிட்டால், அந்த விசாரணைக்கு சசிகலாவும்,அவரின் தம்பி திவாகரனும், கணவர் நடராஜனும், ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பட்ட மற்ற உறவினர்களும், முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள், என்ற நம்பிக்கையை நடராஜன் வெளிப்படுத்தி உள்ளார்; குற்றம் அற்றவர்கள் வெளிப்படுத்தும் துணிச்சலுடன்.

No comments:

Post a Comment