Saturday, December 12, 2015


கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் (2)

 

  ஒரு பின்னூட்டமும்(Feedback)  விளக்கமும்



"தோழர் பெரியாரின் விமர்சனங்கள் - சுயவிமர்சனங்கள் அதை உடனடியாக வெளிபடுத்திய முறைமைகள் ஆகியவற்றை கோபம் - உணர்வுவயப்படுதல் எனச் சுருக்க வேண்டியதில்லையே. 

பெரியாரின் விமர்சனங்கள் - வெளிப்படுத்துதல்கள் என்பவைக்கு சமூகத்தில் அரசியல் தளத்தில் மதிப்பீடு கொண்டதாக அமைந்தது. அதே சமயம் அதற்கான விளைவுகளும்( positive ) விளைந்தன.

பெரியாரின் இத்தகைய கோப வெளிப்பாடுகளில் விமர்சனங்களில் இருந்த நேர்மைதான் அவரது துணிச்சலாக இருந்தது."
என்று இதற்கு முந்தையப் பதிவு தொடர்பாக‌ வந்துள்ள பின்னூட்டம்(Feedback);

எனது பார்வையில்;

திறந்த மனது, அறிவு நேர்மை, சமூக பொறுப்பு, தனது தவறான நிலைப்பாடுகளை, புதிய சான்றுகளின் அடிப்படையில், தவறு என்று பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்ளும் துணிச்சல், உடை, உணவு உள்ளிட்ட சொந்த வாழ்வில், மேற்கத்திய மோகமற்ற எளிமை, ஆகியவற்றில் ஈ.வெ.ரா மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில், உலக அளவில் முன்மாதிரியானவர் (Role Model) ஆவார்.

" “கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, உண்மையில் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது?” என்று அவரிடம் கேட்ட போது, எந்த தயக்கமும் இன்றி “வந்த கடவுளைச் சோதித்துப் பார்த்து உண்மையென்றால், கடவுள் உண்டு என்று சொல்லி விடலாம். நமக்கும் கடவுளுக்கும் தனிப்பட்ட சண்டையா, என்ன?” என்ற வகையில் பதில் சொன்னவர் அவர்."
http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html
 
தனது ஆருயிர் நண்பர் ராஜாஜியின் பிணம் எரியூட்டப்படுவதற்கு முன், சக்கர நாற்காலியுடன் தன்னைத் தூக்கச்செய்து, மூன்று முறை வலம் வந்து, 'இந்து மத' சடங்கை நிறைவேற்றிய அளவுக்கு, தனிமனித நேயத்தில் 'சிகரமாக' வாழ்ந்தவர் ஈ.வெ.ரா.

சமூகவியல், இசை உள்ளிட்ட எனது ஆய்வுகளில் நம்பமுடியாத அளவுக்கு கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டதற்கும் (http://musictholkappiam.blogspot.com/ & http://musicdrvee.blogspot.com./), முக்கிய காரணம், அவரை முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்ததால் தான்; அவரது வெற்றி/தோல்விகளிலிருந்தும்(தமது வரைஎல்லைகள்-limitations-  பற்றிய புரிதலின்றி, பயணிப்பதால் வரும் கேடுகள் பற்றிய தெளிவுடன் பாடம் கற்று), அவ்வாறு வாழ்ந்ததால், நான் அனுபவித்த நம்பமுடியாத துன்பங்களும்/அவமானங்களும், மகிழ்ச்சிகளும், அந்த கண்டுபிடிப்புகளுக்கும், எனது பதிவுகளுக்கும், அடித்தளங்களாக அமைந்தன.

எனவே தான், அவரை இழிவு படுத்திய எச்.ராஜா(பா.ஜ.க)வின் கருத்தானது, மோடி ஆட்சியின் கருத்தாக அமையுமானால், ('பெரியார்' கட்சிகள், 'உணர்ச்சிபூர்வ போக்கில்', கடந்த சுமார் 10 வருடங்களாக, எனது விமர்சனங்களை அறிவுபூர்வ விவாதத்திற்குட்படுத்த ஆர்வமற்ற‌ சூழலில்,) எனது இந்திய குடியுரிமையை 'சரண்டர்'(surrender) செய்து, எனது ஆய்வுகளை ஊக்குவிக்கும் நாட்டிற்கு 'அடைக்கலம்' கோர, அனுமதிக்குமாறு, குடியரசு தலைவருக்கு மடல் எழுத எண்ணினேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
பொதுஅரங்கில், எதிர்நிலைப்பாடுகளில் உள்ளவர்களை, உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தும் போக்கானது, காங்கிரசிலிருந்து இடம் பெயர்ந்து, 1944இல் திராவிடர் கழகத்தில் முளை விட்டு, 1949க்குப்பின் வீரியத்துடன் வளர்ந்து, இன்று உச்சக்கட்டத்தில்,  பா.ஜ.க உள்ளிட்ட 'தேசிய' கட்சிகளையும் சிக்க வைத்துள்ளதன், அந்த உணர்ச்சிகர இழிவுபடுத்தும் போக்கான சுற்றின்(cycle)  முடிவான வெளிப்பாடாக, எச்.ராஜா பயணிக்கிறாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html

சமூகத்தில் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்குள் உள்ள இயக்கத்தன்மையில்(Dynamic) செயல்படும் முரண்பாடுகளை(Contradictions), கண்காணித்து, அழிவுபூர்வ கூறுகளை அடையாளம் கண்டு, பலகீனப்படுத்தும் அறிவுபூர்வ அணுகுமுறையை விடுத்து, உணர்ச்சிபூர்வ போக்கில், தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் (உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் கடைபிடிக்கும்) போக்கானது, ஈ.வெ.ராவிடம் வெளிப்பட்டத்தில்லை. காங்கிரசையும், நேருவையும் கடுமையாக எதிர்த்துக்கொண்டே, காமராஜரை அவர் ஆதரித்ததும், 'தனி திராவிட நாடு' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை 'கோரி' பெற்றதும், அந்த அறிவுபூர்வ அணுகுமுறையில் தான், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  ( "We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ; http://en.wikipedia.org/wiki/C._R._formula)

2002 குஜராத் கலவரத்திற்குப்பின், மோடி எனது குவியத்திற்குள்ளானார் (focus).

டெல்லி சீக்கியர் படுகொலை தொடர்பான, மற்றும் அதற்கு பின்னாளிய ராஜிவ்காந்தியுடன், அவரை ஒப்பிட்டு, குஜராத்தில் அதன்பின் நடந்த பொதுத்தேர்தல்களில், இந்துத்வாக்கிற்குள் இருந்த சக்திகள் மோடியை எதிர்த்து ஏன்?எவ்வாறு செயல்பட்டனர்? என்று ஆராய்ந்தேன்.

தனிமனித அளவில் அவரை 'குஜராத் காமராஜராக' ('குலக்கல்வி' திட்டம் அமுலானபோதும், காமராஜர் காங்கிரசில் தான் இருந்தார்) அடையாளம் கண்டு, 2005 முதல் இன்றுவரை, என்னால் இயன்ற அளவுக்கு, இந்துத்வாவிற்குள்ளும், வெளியும் இருந்த 'மோடி எதிர்ப்பு சக்திகளை' எதிர்த்து, நான் பங்களிப்பு வழங்கியுள்ளதை, என்னுடன் இணையத்தொடர்பில் இருந்தவர்கள் அறிவார்கள்.

ஆனால் 'பெரியாருக்கு' இருந்த வரை எல்லைகளில்(limitations) சிலவற்றை, 'பிரதமர் மோடியிடம் அடையாளம்' கண்டு, தம்மை (இந்துத்வாவிற்குள்ளும், வெளியிலும், 'மறைமுக' கூட்டில்) எதிர்க்கும் சக்திகளிடமிருந்து அவர் தப்பித்து, சாதி , மத பேதமற்ற, ஊழலற்ற, வளர்ச்சிப் போக்கில், இந்தியா பயணிக்குமா? அந்த போக்கில், வீழ்ச்சியிலிருந்து, தமிழ்நாடு தப்பிக்குமா?  என்று ஐயம் எழுந்ததும், மேற்குறிப்பிட்ட மடல் எழுத எண்ணியதற்கான‌, கூடுதல் காரணமாகும். 
http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html
வரலாற்றில், மேற்குறிப்பிட்ட வகையில் வாழும், (நான் உள்ளிட்டு எவருக்கும்), ஒரு மனிதரின் சமூக பங்களிப்பில் ஏற்படும் விளைவுகள் ஆனவை,  கீழ்வரும் காரணிகளைப் பொறுத்ததாகும்.

1. சம்பந்தப்பட்ட மனிதரின் , அவருக்கு புரிந்த மற்றும் புரியாத, தனிமனித வரை எல்லைகள்(limitations);

2. அந்த வரை எல்லைகளுக்குட்பட்டு, சமூகத்தில் உள்ள ஆற்றல்களையும், செயல்பாட்டில் உள்ள விசைகளையும் கணக்கில் கொண்டு,உருவாக்கி செயல்படுத்தும் முழுசெயல் திட்டமும்(strategy), உடனடி செயல் திட்டமும்(tactics);

3. தனிமனிதரின் வரை எல்லைகளுக்கப்பால் உலகம், மற்றும் இயற்கை புலங்களில் உள்ள 'எதிர்பாரா' ஆற்றல்கள்(Energy) மற்றும் வெளிப்படும் விசைகள்(Forces);

4. மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்கும் மனிதரின் வயதாகும் போது, ஏற்படும் மாற்றங்கள் (Physically & mentally dependent)  காரணமாக, அவர் ஏற்கனவே பயணித்த  தடத்தில், பகுதியாக தடம் புரண்டு, வெளிப்படுபவை;

மேற்குறிப்பிட்ட காரணிகளின் செல்வாக்கின் தொகுவிளைவாக(Resultant),  சமூக இயக்கவியலில் (Social Dynamics), மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவரின் பயணத்தில், ஏற்படுத்தும் 'திசை மாற்றமானது', தவறாக அமைந்து விட்டால், அழிவுபூர்வ விசைகளின் செல்வாக்கில், கால ஓட்டத்தில், சமூகத்திற்கு பாதகமான எதிர்த்திசையில் திருப்பும் சமூக சுழற்சிக்கு(social torsion) உள்ளாகி, அந்த தலைவருக்கும், அந்த சமூகத்திற்கும் கேடாக முடியுமா? என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்விற்கு, உதவும் தகவல்கள் வருமாறு:
[ஈ.வெ.ராவுக்கு கல்வி தொடர்பாக இருந்த வரைஎல்லைகள்(limitations)  இல்லாத, லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட 'திசை மாற்றமானது'; 'தனி நாடு' (லீ குவான் யூ உள்ளிட்டு) கோரிக்கையின்றி, தனிநாடான சிங்கப்பூரில், சாலை சந்திப்புகளில் போலீஸ் பகிரங்கமாக லஞ்சம் வாங்கும் அளவுக்கு மோசமான நிலை; மலேசியா நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவு; என்ற நிலையிலிருந்து, இன்றுள்ள சிங்கப்பூராக எவ்வாறு முன்னேறியது? முன்மாதிரியாக வாழ்ந்த தலைவருக்கும், கட்சிக்கும், 'சுருதி பேதமின்றி' பயணித்தது முக்கிய காரணமா? என்பது தொடர்பான‌ அரிய பாடங்களை தரவல்லதாக, லீ குவான் யூ வாழ்க்கை வரலாறும், சிங்கப்பூர் வரலாறும் அமைந்துள்ளன.]

திருப்பாதிரிபுலியூர் ஞானியார் ஸ்வாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் தமது 'குடிஅரசு' இதழை துவக்கியவர் ஈ.வெ.ரா ஆவார்.
http://www.tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/
( இதில் வியப்பென்னவென்றால், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்த நான், எனது இசை ஆராய்ச்சிகளின் போக்கில் , எதிர் திசையில், சைவத்தை நோக்கி பயணிக்கிறேன்.
http://musicresearchlibrary.net/omeka/items/show/2447  & http://veepandi.blogspot.com/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html )
 

அதன்பின் ஈ.வெ.ரா திசை திரும்பி, அண்ணாதுரையின் வருகை காரணமாக, தமிழ்நாட்டில் 'புதிதாக' வெளிப்பட்ட கூடுதல் ஆற்றல்கள் பற்றி 'தவறாக' கணித்து, அவரை 'வளர்த்து', 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாக்கி, அதன் பின்விளைவுகள் சமூகக்கேடாகும் 'சுருதி பேத' அபாயத்தை உணர்ந்து, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் அதை வெளிப்படுத்தியது;

பின் அதிலிருந்து, 'சமூக நன்மை' என்று கருதி, சறுக்கி, அடுத்த நடந்த மாநாட்டில், அண்ணாதுரையை சாரட்டில் உட்காரவைத்து, ஈ.வெ.ரா ஊர்வலத்தில் நடந்தது; அதன்பின் அந்த 'சறுக்கலால்' பலனில்லை என்று உணர்ந்து, மணியம்மையை 'வாரிசாக்கியது' (அன்று அமுலில் இருந்த இந்து சட்டப்படி, வாரிசாக்க ஆணென்றால் 'மகனாக' தத்து எடுக்கலாம்; பெண்ணென்றால் சட்டப்படி 'மனைவியாக்குவதன்' மூலமே தான் வாரிசாக்க முடியும்); 

உண்மை தெரிந்தும், சமூகத்தின் 'பொது கருத்து' சூழலை பயன்படுத்தி, அண்ணாதுரையின் தி.மு.க வானது,( 'பெரியார்' எதிர்ப்பில் தி.மு.க வின் வால்களாக, - ராஜாஜியின் ஆசியோடு-  செயல்பட்டு, பின் தி.மு.க ஆட்சியில் 'பலன்களும்'அனுபவித்த, ம.பொ.சி, ஆதித்தனார், போன்றோரின் 'தமிழர்' கட்சிகளும், துணை புரிய)‌ ஈ.வெ.ராவை 'வெற்றிகரமாக' இழிவு படுத்த முடிந்தது;

அந்த போக்கில், உடல் அளவிலும்(physically),  மன அளவிலும்(mentally) தனது சுயசார்பை பகுதியாக‌(partly) இழந்து, ஈ.வெ.ரா பிறர் சார்பானது;

என்று பகுத்தாய்ந்து தான், அவரை 'முன்மாதிரியாக' கொண்டு , நான் செயல்படுகிறேன்; ஒரு  கூட்டு முயற்சியாக செய்ய வேண்டியதை, தனி ஆளாக முயலும்போது, தவிர்க்க முடியாமல் உள்ள வரை எல்லைகள் பற்றிய புரிதலோடு.

புதிய சான்றுகளின் அடிப்படையில், தவறு என்று பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்ளும் ஈ.வெ.ராவின் துணிச்சலை, என்னால் இயன்ற அளவு அகவயப்படுத்தி வாழ்வதால்; ஈ.வெ.ராவிற்கு இருந்த 'கல்வி' தொடர்பான வரைஎல்லைகள் எனக்கு இல்லையென்றாலும், அதையும் மீறி, மேற்குறிப்பிட்ட வரை எல்லைகளின் 'பாதகங்களும்' கால ஓட்டத்தில் வெளிப்படும், பிறர் பங்களிப்பால், 'சரி செய்யப்படும்' என்ற நம்பிக்கையில்.

1857 முதலாம் இந்திய விடுதலைப் போரில், காலனி ஆட்சியாளர்கள் என்னென்ன பாடங்கள் கற்று, தமது ஆட்சி அதிகாரத்தையும், உளவு அமைப்புகளையும் பயன்படுத்தி, காங்கிரஸ் உள்ளிட்டு எந்தெந்த கட்சிகளை உருவாக்கினார்கள்? எந்தந்த தலைவர்களை தமது நேர்முக/மறைமுக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்? அவர்களில் யார் யாரின் துணையோடு நேதாஜி போன்று தனத்து ஒத்து வராத தலைவர்களை ஈவிரக்கமில்லாமல் ஒழித்தார்கள்? என்பது பற்றிய தகவல்களும், குறிப்பாக இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும், இந்தியாவானது எந்தந்த வெளிநாட்டு உளவு அமைப்புகளின் வேட்டைக்காடாக இருந்தது என்பது பற்றிய தகவல்களும், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் கசியத் தொடங்கியுள்ளன. உதாரணமாக; "They make Indians fight with each other on caste and communal lines, operating through their agents, which include many of the political parties in India. Partition of India in 1947 was also part of this design."
http://www.outlookindia.com/article/our-real-enemies-are-abroad/295698
1944க்கு முன் தமிழ்நாட்டில் நடந்த சாதி, மத மோதல்கள், அதன்பின் நடந்த சாதி, மத மோதல்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, மேற்குறிப்பிட்ட பின்னணியில் ஆராய்வது அவசியமில்லையா? 'சாதி, மத போதை'யாளர்களையும், 'எதிரெதிர் கொள்கை உணர்ச்சிபூர்வ போதை'யாளர்களையும், 'பலிஆடு'களாக 'காவு' கொடுத்து, தம்மையும், தமது குடும்பத்தையும் 'செல்வம், செல்வாக்கில்' 'அதிவேகமாக' வளர்த்துக்கொண்ட, 'எதிரெதிர்' தலைவர்கள் யார்? யார்? என்பதும், அந்த ஆராய்ச்சியில் இடம் பெறுவது அவசியமில்லையா?

இந்தியாவில் பிரிவினை முயற்சிகள், சாதி, மத மோதல்கள், போன்றவற்றை, பொம்மலாட்டமாக பின்னிருந்தும் இயக்கும் 'உளவு அமைப்புகள்' பற்றியும் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'ஆம் ஆத்மி கட்சி'யின் வெளிநாட்டு வலைப்பின்னல் பற்றியும், ஆங்கில ஊடகங்களில் 'கசிய'த் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் 'மீடியா குவியத்தில்' வலம் வரும் 'அறிவுஜீவிகள்' இது பற்றி, தமது தமிழ் வாசகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளர்களா? இல்லையென்றால், அது அவர்களது அறியாமையா? அல்லது அவர்களும் மேற்குறிப்பிட்ட வலைப்பின்னலில் உள்ளார்களா? 

எனது இசை ஆராய்ச்சி தொடர்பான திசை திரும்பலுக்குப்பின், திருச்சி பெரியார் மையத்தில் செயல்பட்டவர்களில், 'சுயநலக்கள்வர்களாக' நான் அடையாளம் கண்டு, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றியவர்களில் யார்? யார்? மேற்குறிப்பிட்ட வலைப்பின்னலில் சிக்கி, பெரியார் சமூக கிருமிகளாக‌, எனது திசைமாற்ற 'இருட்டினை'(Shadow Region)  பயன்படுத்தி, எனக்கு தெரியாமல், (அந்த சமூக கிருமிகளை நான் கண்காணிக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள‌) எனது குடும்பத்தினர் மூலம் என்னை 'கண்காணித்து', 'பெரியார் மையம்' அடையாளத்தையும், மதிப்பையும் சுயநல நோக்கில் தவறாக பயன்படுத்தி, அந்த போக்கில் 'அதிவேக' பணக்காரர்கள் ஆனார்க
ள், 'பெரியார் மையம்' மயக்கத்தில், ஏமாந்த,  பெரியார் ஆதரவாளர்களையும் 'பயன்படுத்திக்கொண்டு'? 'அதில் எந்த அளவுக்கு 'பெரியார்' சமூக கிருமிகள் இழிவுக்கு இலக்கணமாக வாழ்கிறார்கள்?' என்று நான் சமூகவியல் பரிசோதனை செய்கிறேன், என்பதை அவர்கள் அறியவில்லை. அந்த சமூக கிருமிகள் வழங்கிய உள்ளீடுகளின்றி, 1944இல் ஈ.வெ.ரா மேற்கொண்ட பாதகமான திசை மாற்றத்தை நான் கண்டுபிடித்திருக்க முடியாது.
http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html 
1970 களிலிருந்து புற்றீசல் போல் வளர்ந்த ஆங்கிலவழிக்கல்வியானது, தமிழ்நாட்டின் அறிவுப்புலத்தையும், தமிழரின் பண்பாட்டையும் சீரழித்த சமூக சூழலில், 'பெரியார் சமூக கிருமிகள்' 'அதிவேகமாக' வளர்ந்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html

ஈ.வெ.ராவின் சமூக பயணத்தில் ஏற்பட்ட திசை மாற்றம், மற்றும் அதன் தொடர்விளைவான சமூக சுழற்சியின் (social torsion) விளைவுகளையும், மேற்குறிப்பிட்ட பின்னணியில் ஆராய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விளைவுகளின், தொடர்விளைவான சமூக சுழற்சியின் (social torsion)  இறுதிக்கட்ட(climax)  வெளி
ப்பாடே, சென்னையில் ஏற்பட்ட வெள்ளச்சேதமும், ஏரிகள், ஆறுகள், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட 'அனைத்தும்', 'பெரியார் சமூக கிருமிகளின்' துணையோடு 'ஊழல் பெரும்பசிக்கு' இரையானதும்; தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணமும்; தமிழர்களிடையே 'செல்வம், செல்வாக்கிற்கு வாலாட்டும் மனித நாய்களின்' 'அதிவேக' வளர்ச்சியுமாகும்.


அந்த 'இறுதிக்கட்டம்' முடிந்து, மீண்டும் ஆக்கபூர்வ திசையில் , தமிழ்நாடு
பயணிக்க துவங்கி விட்டதை உணர்த்தும் அறிகுறிகளே, வெள்ள நிவாரணத்தில் வெளிப்பட்ட, அரசியல் கட்சிகளைச் சாராதோரின், 'அபரீதமான பங்களிப்பு' உணர்த்துவதாகும். 

இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, ஈ.வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:
" வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

இந்திய ஊழல் கோரப்பசியாளர்களிடம், செல்வாக்கை இழந்த, மேல்நாட்டு வணிக வேந்தர்கள் ஆதரவுடன் உருவானது தான், 'ஆம் ஆத்மி கட்சியா'? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளும் வெளிவரத்தொடங்கியுள்ளன.

இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும்.  வெள்ள நிவாரணப் பணியில் பங்களித்த, கட்சிசாரா இளைஞர்களும், மாணவர்களும், 'மூல காரணத்தை' தேடி, கண்டுபிடித்து, அவர்களின் கோபமானது, சென்னை வெள்ளம் போல, பெருக்கெடுப்பதற்கு முன், 'பெரியார்' சமூக கிருமிகளிடமிருந்து, 'ஈ.வெ.ரா'வைக் காப்பாற்ற முடியுமா? அதிலும் சுமார் 50 வருடங்களுக்கு முன் வெளிப்படுத்திய, 'தமிழ், மதுவிலக்கு, திராவிடர் 'இனம்' (?)' தொடர்பான நிலைப்பாடுகளை, ஈ.வெ.ரா அறிவுறுத்தியபடி, 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், இன்றும் அந்த பழைய நிலைப்பாடுகளையே (சுயநல போக்கிலோ அல்லது 'திராவிட' மனநோயாளியாகவோ) முன்னிறுத்தினால், 'தமிழ், தமிழர்' பகையாக 'பெரியாரை' முன்னிறுத்தும், 'பெரியார் எதிர்ப்பாளார்களின்' சூழ்ச்சிக்கு துணை போய், 'பெரியாரை' தமிழ்நாட்டு மக்களின் 'கோப வெள்ளத்திற்கு' இரையாக்கி விடாதா, ம.பொ.சி, பெங்களுர் குணா வழியில், வழக்கறிஞர் பா. குப்பனின் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ போன்ற நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில்?
 

இவை பற்றிய புரிதலின்றி, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து அந்நியமாகி, 'நீண்ட காலம்' பயணித்து,  'உணர்ச்சிபூர்வ வழிபாட்டு போக்கில்' தொடர்ந்து பயணிக்கும் 'பெரியார்' கட்சிகள் எல்லாம், 'விழித்துக் கொள்ளவில்லையென்றால்', 'பெரியார் சமூக கிருமிகளின்' துணையோடு, விடுதலைப்புலி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினராக உள்ள‌,  'பெரியார்' எதிர்ப்பாளர்கள் (அவர்களில் யார்? யார்? 1980களில் 'கடும் நிதி மற்றும் தமிழ்நாட்டில் 'சமூக வெளி' -social space- நெருக்கடிகளிலும் இருந்த, விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள்)   வினையூக்கியாக (catalyst)  செயல்பட,  'தமிழ், தமிழர்' நலன்களின் 'எதிரி சக்தியாக‌' 'பெரியார்', முத்திரை குத்தப்பட்டு(branded),   சமூக குப்பைத் தொட்டிக்கு போகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எனக்கு தெரிகிறது; எனது 'ஈ.வெ.ரா மீட்பு' முயற்சிகளையும் தாண்டி. 
"நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை":
http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html


குறிப்பு: 1944இல் ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம்,  என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்
புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன். 

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama


பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார். (' தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு; 'தமிழ் ஈழம்'  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark);
http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன். (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )
எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுவதற்கு, மேற்குறிப்பிட்டது போன்ற பல அனுப
ங்களிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கவேயாகும்.
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

No comments:

Post a Comment