Friday, October 23, 2015



இடையிடு 6: Interlude 6:

                          'மனித எந்திரர்களுக்கு' விளங்காத‌து


ஒரு மனிதரின் மனதானது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவில், அந்த மனிதரின் செயல்பாடுகளை தீர்மானிக்கும். தனி மனித அளவில் உள்ள முரண்பாடுகளைப் புரிந்து, தீய எண்ணங்களை விட்டு விலகி, ஆக்கபூர்வ திசையில், தமது மனதினை நெறிப்படுத்தி வாழும் மனிதர்கள் எல்லாம், 'நல் இனம்' என்று, சங்க இலக்கியங்கள் அடையாளப்படுத்தியுள்ளன. தீய எண்ணங்களின் அடிமைகளாக வாழ்பவர்கள் 'சிற்றினம்' என்றும், சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழும் புலமை மிக்க 'நல் இனம்' ஆனது, 'சான்றோர் இனம்' என்றும், அவை அடையாளப்படுத்தியுள்ளன. "  

ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்'(Race) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது." தமிழின், தமிழரின் வீழ்ச்சிக்கு அந்த 'திரிதல்',  எவ்வளவு பங்களிப்பு வழங்கியது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html
சங்க இலக்கியங்களில் வரும் 'இனம்' மற்றும் 'இயல்பு' ஆகிய சொற்கள் தரும் பொருளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 'இனம்' என்ற பொருளில் புகுத்தப்பட்ட 'திரிதல்' ஆனது, தமிழர்களின் 'இயல்பில்' திரிதலைத் தூண்டியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html

தனி மனிதரைப் போன்றே, குடும்பம், கட்சி உள்ளிட்ட சமூகம் தொடர்புடைய அமைப்புகளும், மேற்சொன்ன முரண்பாடுகளின் தொகுவிளைவில்  செயல்படுகின்றன.

அம்முரண்பாடுகள் பற்றிய புரிதலின்றி, 'இந்து, முஸ்லீம், தலித், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட்' போன்ற இன்னும் பல,‌  புற 'லேபிள்களை' வைத்து, அந்த 'லேபிள்'களுக்குள் உள்ள ஆக்கபூர்வ/அழிவுபூர்வ முரண்பாடுகள் ( இயக்கத் தன்மையிலான சமூக தள விளைவு - dynamic social polarization ) பற்றிய புரிதலின்றி, எந்த ஒரு மனிதரையும், கட்சியையும் விரும்பி/வெறுத்து வாழ்பவர்கள் எல்லாம் மனித எந்திரர்கள் ஆவர்.

பிராமணர்களை எதிரியாக சித்தரித்து, இயக்கம் நடத்திய பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை கோரி, பெற்று, பகிரங்கமாக அறிவித்தது ஏன்? என்ற செயல்பாட்டை, அந்த மனித எந்திரர்களால் விளங்கிக் கொள்ள முடியாது.

பத்திரிக்கையாளர் எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்கள் மோடி  ஆதரவாளர்களாக ஏன் மாறினார்கள்? (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),
அது  போல, இன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடிருந்தால், தான் அன்றைய முதல்வர் காமராஜரை ஆதரித்தது போல, இன்றைய பிரதமர் மோடியையும் ஆதரித்திருப்பார் என்பதையும் அந்த 'எந்திரர்களால்' விளங்கிக் கொள்ள முடியாது. அதே போல், 'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் வரலாற்று மரணத்திற்கு உள்ளாகி வருவது தொடர்பான, எனது அபாய அறிவிப்பும்,  'பெரியார் ஈ.வெ.ரா எந்திரர்களுக்கு' விளங்காது.

உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டும் மூடர்களை விட்டு விலகி, இந்துத்வா புலத்தில், அறிவுபூர்வ விவாதத்தை முன்னெடுக்கும் புலமையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக, பெரியார் ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் மத்தியில், அந்த போக்கு உள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். 

From: ' உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில்; திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும்(2); பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ மூடர்கள் (morons) யார்?யார்?'
http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html


“ 'இந்துத்வா' அரங்கில் உணர்ச்சி பூர்வமான போக்குகளின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்கள், (குறிப்பாக புராணங்கள், இலக்கியங்கள் பற்றி பெரியார் ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கேள்விகள் உள்ளிட்டு,)  நடைபெற்று வருவதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்,
ஆர்.எஸ்.எஸ்  அதிகாரபூர்வ இதழ் http://www.organiser.org/;
இணையத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா http://rajivmalhotra.com/;
மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளது போன்ற இந்துத்வா ஆதரவாளர்களின் கட்டுரைகளை படிக்கலாம்.
http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/
http://www.quora.com/What-is-Rashtriya-Swayamsevak-Sanghs-RSS-take-on-casteism-How-is-RSS-trying-to-root-out-the-problem-of-casteism

http://swarajyamag.com/politics/to-shahrukh-khan-secularism-is-counter-patriotic/
https://in.news.yahoo.com/nda-backs-prosecution-subramanian-swamy-003400085.html
 

மேற்குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதங்களில், மேற்கத்திய 'அறிவு ஜீவிகளின்' தவறுகள் வெளிப்படுவது வரவேற்கத் தக்கதாகும். ஆனால் இந்திய மொழிகளில் சமஸ்கிருத மொழியில் உள்ளவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு விவாதிப்பது என்பது, எப்படி சரியாகும்? தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளில் உள்ள நூல்களையும் கணக்கில் கொள்ள வேண்டும், என்ற எனது கருத்தும், மேற்குறிப்பிட்ட ஆர்.எஸ்.எஸ் இணைய இதழில் வெளிவந்துள்ளது. சமஸ்கிருதத்தில் உலக அளவில் அறிவுபூர்வ விவாதங்களின் ஊடே, புலமையும் அதிகரித்து வரும் போக்கில், தமிழில் உணர்ச்சிபூர்வ ஆதிக்கத்தில், புலமை எந்த அளவுக்கு 'வேகமாக' வீழ்ந்து வருகிறது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த கால அடிமைகளாக,உணர்ச்சிபூர்வ எந்திரர் போக்கு நீடிப்பது தொடர்கிறது. விவாதங்களில் விவாத வரம்பை மீறி, விவாதத்தில் ஈடுபடுவோர் மீது திசை திரும்பி, 'உணர்ச்சிபூர்வ இரைச்சலை' தூண்டும் போக்கு உள்ள வரை, அந்த 'எந்திரர் போக்கு' மறையாது. 
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_25.html

அந்த உணர்ச்சிபூர்வ இரைச்சலுடன் கூடிய எந்திரர் போக்கே, தமிழ்நாட்டில் தீ இனத்தின் செல்வாக்கில், ஆங்கில வழிக் கல்வி மூலம், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்கி, தமிழும், தமிழரும் சீரழிவு திசையில் பயணிக்க காரணமாகும். அதிலும் சமஸ்கிருதத்தில் உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி, அறிவுபூர்வ விவாதங்கள் வளர்ந்து வருகையில், தமிழில் உணர்ச்சிபூர்வ போக்குகளின் ஆதிக்கம் தொடர்வதானது, தமிழின் 'அதிவேக' வீழ்ச்சிக்கு வழி வகுக்காதா?

சமூக அளவிலும் 'செல்வாக்கான', 'தீ இனமாக' உள்ள‌ சிற்றினத்தை அடையாளம் கண்டு, புறத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சி, அத்தகையோரை தத்தம் சமூக வட்டத்திலிருந்து அகற்றாத வரை, தமிழும், தமிழர்களும் மீள்வதற்கு, நாம் பங்களிப்பு வழங்க இயலாது. 'திருட்டு, திருட்டு (தமிழுக்கும், தமிழருக்கும் ஆபத்து)' என்று கூக்குரலிட்டு, 'சிக்காமல் தப்பிக்கும்  திருடர்களாக (உண்மையில் தமிழுக்கும், தமிழருக்கும் துரோகிகளாக)' அல்லது புறத்தில் கிடைக்கும் 'லாபங்களுக்காக', தரகு, வன்முறை, கவிதை, கட்டுரை, மேடைப் பேச்சு மூலம், அவர்களுக்கு துணையாக,  நம்மை நாமே ஏமாற்றி வாழ்பவர்களாக, வாழ்ந்து வரும்  ''இயல்பில் திரிதல்'  போக்குகளிலிருந்து, நாம் மீளவும் முடியாது. (''குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?'; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர்.

குறிப்பு: எனது ஆய்வு முடிவுகள் மீது உடைமையுணர்வு (possessiveness) இன்றி , திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், புதிய சான்றுகள் அடிப்படையில், அம்முடிவுகளை திருத்தி, நெறிப்படுத்தி கொள்வதில் தயக்கம் காட்டியதில்லை. அவ்வாறு திருத்திக் கொள்வதை வெளிப்படுத்தி கொண்டு, அதற்கு காரணமானவர்களுக்கும், எனது மாணவர்களாயிருந்தாலும்,  பகிரங்கமாக நன்றி தெரிவிப்பதும் அதில் அடக்கம். எனது ஆய்வுகளின் வெற்றியின் இரகசியமும் அதுவேயாகும்.

No comments:

Post a Comment