Sunday, May 24, 2015


தமிழ்நாட்டில் 'தமிழ் வேர்' மரணப்படுக்கையில்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும் 

 


 '1944இல், திராவிடர் கழகம் தோன்றிய பின், பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கின. அப்போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்', தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னைப் போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக' சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம்,  திருச்சி ‘பெரியார் மையம்’ அனுபவங்கள் காரணமாக, எனக்குள் எழுந்தது. அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்ட, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? என்ற ஆய்வுகளில்,  நான் ஈடுபட,  அந்த அனுபவங்கள் காரணமாகும். 'என்பதையும்;

'அதன்பின்,  'தீ இனம்' என்று நான் அடையாளம் கண்டவர்களை விட்டு விலகி, 'நல்லினம் யார்?' என்று ஆராய்ந்து, அத்தகையோரை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழத் தொடங்கிய பின்தான், தமிழ்நாட்டில் இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. எனது ஆய்வு முயற்சிகளில், நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றங்களும் (http://musictholkappiam.blogspot.in/; http://musicdrvee.blogspot.in/) ஏற்பட்டன. வணங்கத்தகும் மனிதர்கள் எனது சமூக வட்டத்தில் இடம்பெறும் போக்குகளும் அதிகரித்தன. ‘உயிருடன் வாழும் பிணங்களின்’ நாற்றத்திலிருந்து விடுபட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியதே, அதற்கு காரணமாகும். (refer post dt. April 17, 2015;’ 'கொள்கை' பிணம் தின்னும் கழுகுகளாகவா? நாமே 'கொள்கைப் பிணமாக'வா? எப்படி நாம் வாழ்கிறோம்?’)' என்பதையும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். 

அவ்வாறு எனது 'நல்லின சமூக வட்டத்தில்' இடம் பெற்றுள்ள திரு.மா. அர்ச்சுனமணி அவர்கள், கீழ்வரும் கட்டுரையை எனது பார்வைக்கு அனுப்பினார்கள்.

‘அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.’

அக்கட்டுரை தொடர்பாக, கீழ்வரும் கருத்தை அவருக்கு அனுப்பினேன்.

"தமிழருக்குள்ள பல பரிமாண அடையாளச்சிக்கலில், ஆன்மிகம் தொடர்பான தீர்வுக்கான தேடலில் உள்ளவர்களின் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரிய கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். நன்றி. 

"இன்பம்: அகத்துறை. இது தமிழர்களுக்கே உரித்தானது. இதன்பால் தமிழ்ச் சங்க நூல்கள் ஏராளம். அவ்வளவு ஏன்? சிவபெருமானே ‘இறையனார் களவியல்’ என்ற அகத்துறை நூல் செய்திருக்கிறார்." தொடர்பாக; 

தமிழ்நாட்டில் தமிழர்கள் நம்பமுடியாத அளவுக்கு அகத்தில் சீரழிந்து, 'பிழைப்பு வேதத்தில்' சிக்கியுள்ளார்கள்; வட மொழி வேதமா? தமிழ் வேதமா? என்பது பற்றிய கவலையின்றி.(‘தமிழரின் நிகழ்கால திரிந்த புறநானூறு வாழ்வியல் கோட்பாடு’; “திரிதல் அம்ம, இவ்வுலகம்; இழிசினர்;"- 'தமக்கென வாழா மன நோயாளிகள் ';post dt. February 17, 2015; http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html )

'தமிழ், தமிழ் உணர்வு' என்பது சுயநல பொது வியாபார மூலதனம் ஆனபடியால், ஆங்கில வழிக் கல்வியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில்,  தமிழை சரியாகப் படிக்கத் தெரியாமல், தமிழ் சான்றோர்கள்/தலைவர்கள்/பேராசிரியர்கள்/ஆர்வலர்கள் குடும்பங்களிலேயே  தமிழ் வேரற்ற மாணவர்கள்  அதிகரிக்கும் அளவுக்கு, தமிழ் வேரற்ற சமூகம் எண்ணிக்கையிலும், வலிமையிலும் வளர்ந்து வருகிறது. 

திராவிட/தமிழ் கட்சிகளின் செயல்பாட்டால், பேச்சும், எழுத்தும் தனது தகவல் பரிமாற்ற வலிமையை(communication strength)  இழந்துள்ளது. முன்மாதிரி செயல்(role model)  மட்டுமே, இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் தகவல் பரிமாற்ற வலிமை பெற்றுள்ளது என்பது எனது அனுபவமாகும்.

ஏழ்மை காரணமாக, தமிழ்வழி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூலம் 'உயிர்மூச்சு' விட்டு, மரணப்படுக்கையில் 'தமிழ் வேர்' உள்ளது. தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் தொடர்பற்று வாழும் திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் ஒதுங்கினால்தான், தமிழ் வேர் பிழைக்கும். தமிழ் வேர் பிழைத்தால் தான், தமிழ் வேதம் தழைக்கும்." 

அது தொடர்பாக, திரு.மா. அர்ச்சுனமணி தெரிவித்த கருத்து வருமாறு;  

" 'தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் தொடர்பற்று வாழும் திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் ஒதுங்கினால்தான், தமிழ் வேர் பிழைக்கும். தமிழ் வேர் பிழைத்தால்தான், தமிழ் வேதம் தழைக்கும்' எனும் தங்களது கூற்றில் ஒரு சிறு மாற்றம் தேவை.  

அவர்கள் தாமாக ஒதுங்கமாட்டார்கள். நம் தமிழ் மக்கள்தாம் அவர்களை ஓரங்கட்ட வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற அறிஞர்களின் புகழும் தொகையும் பெருக வேண்டும். அந்நாள் விரைவில் வரவேண்டும். அதற்கென நாமனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்." 

அக்கருத்தை நடைமுறைப்படுத்தும் சமுக செயல்நுட்பம் (social mechanism)பற்றிய எனது சிறு விளக்கம் வருமாறு; 

"அவர்கள் தாமாக ஒதுங்கமாட்டார்கள். நம் தமிழ் மக்கள்தாம் அவர்களை ஓரங்கட்ட வேண்டும்.  அந்நாள் விரைவில் வரவேண்டும். அதற்கென நாமனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்." தொடர்பாக; 

'அவர்களை' ஓரங்கட்ட, நாமனைவரும் ஒன்றுபடுவதற்கான சமுக செயல்நுட்பம் (social mechanism)’  பற்றி; 

'சிற்றினம்', 'தீ இனம்' யார், யார் என்று அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகி, , அவ்வாறு விலகுவதால், விளையும் இழப்புகளை 'துணிச்சலுடன்' விரும்பி ஏற்று,  ‘நல் இனமாக' வாழ்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வதன் மூலமே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டில் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கை தருவதாகும்.' (refer post dt. May 6, 2015;’ 'நல்லினத்தி நூங்குந் துணையில்லை;  தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460’ ; http://tamilsdirection.blogspot.in/ ) 

அந்த முயற்சியில் பணமும், புகழும் உருவாகி, ஒரு குறிப்பிட்ட வரையெல்லையைத்(Threshold level)  தாண்ட வாய்ப்புள்ள நிலையில், மேற்கண்ட செயல்நுட்பத்தில் இருப்பது போல் ஏமாற்றி, அதைக் 'களவாடும்' திறமைசாலிகள் தமிழ்நாட்டில் திராவிட/தமிழ் கட்சிகளில் நிறைந்துள்ளனர். எனவே அந்த வரையெல்லையை, ஆபத்து எல்லையாகக்(danger zone)  கருதி, எந்த தனி மனிதரும் மேற்கண்ட செயல்நுட்பத்தில்,  'புகழ், செல்வம், செல்வாக்கு' ஈட்ட வழியில்லாதவாறு பார்ப்பது அவசியமாகும்.

அதைச் செயல்படுத்த, 'தமிழ், தமிழ் உணர்வு' என்று மேடையில் பேசுபவர்களும், எழுதுபவர்களும்,தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் எந்த அளவுக்கு ஒற்றுமை/வேற்றுமை உள்ளது? 'அந்த' பேச்சாளாரும், எழுத்தாளரும்' பொது வாழ்வில் நுழைந்தபோது எவ்வளவு சொத்து இருந்தது? அது எவ்வாறு அதிகரித்தது? என்பதை தெளிவுபடுத்தாதவர்கள் மீது,  'தீண்டாமையை'க் கடைபிடிக்கும் துணிச்சலும் அவசியமாகும். 

‘தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’ - திருக்குறள் 462  “ 

மேற்குறிப்பிட்ட சமூக செயல்நுட்பத்தை அமுல்படுத்த, இந்தியாவிலேயே, தமிழர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அடையாளச் சிக்கலையும், அதன் காரணமாக, தமிழ்நாட்டுத்  தமிழர்கள் (depoliticize) அரசியல் நீக்கத்திற்குள்ளாகியுள்ளதையும் ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். அது தொடர்பான, கேள்விகள் வருமாறு;

“பெரியாரின் 'திராவிட நாடு பிரிவினை'யை ராஜாஜி ஆதரித்ததால், 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் பலகீனமாக, ராஜாஜி பங்களிப்பு வழங்கியுள்ளார். இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே, 'தமிழர், திராவிடர், இந்தியர்' குழப்பங்களால், அடையாளச்சிதைவுக்கு உள்ளானார்கள். அதனால், 1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்த போக்குகள், 'தனித் தமிழ்நாடு' கோரிக்கையை சீரழித்து, கேலிப்பொருளாக்கியது போலவே, 'தனித் தமிழ் ஈழ' முயற்சிகள் முள்ளிவாய்க்கால் மரணத்தில் முடிய காரணமா? இந்த போக்குகள் தமிழ்நாட்டு தமிழர்களை அரசியல் நீக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா (depoliticize)? சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை, ஆதாயத்தொண்டர்களும்/ தலைவர்களும் செல்வாக்கு பெற‌, அதுவே காரணமா?

கட்சி, கொள்கை சம்பந்தமின்றி,  மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்குள்ள அபரீதமான செல்வாக்கிற்கும், நடுத்தர, ஏழை,  தமிழர்களில் பெரும்பாலோரின் மத்தியில், மற்ற எவரையும் விட, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குமுள்ள அதீதமான‌ செல்வாக்கிற்கும், உள்ள காரணங்கள் யாவை?” (refer post dt. May 6, 2015;’ 'நல்லினத்தி நூங்குந் துணையில்லை,  தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460’)  'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான தொடக்கப்புள்ளியாக, வெறுத்தாலும், விரும்பினாலும், மேற்குறிப்பிட்ட 'செல்வாக்குகள்' இயற்கை விதியாக அமைந்துள்ளன.அதிலும் மோடி உள்ளிட்டு, நிகழ்கால தலைவர்களில், தமது கட்சியிலும், ஆட்சியிலும், எந்த தடையுமின்றி, நினைத்ததை சாதிக்கக்கூடிய‌ ஒரே தலைவர் ஜெயலலிதா ஆவார். அந்த வகையிலான‌ எம்.ஜி.ஆரின் சாதனையே தமிழக அரசின் பெரியாரின் எழுத்து சீர்திருத்தமாகும்.

மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரிலும், 'தமிழர்' என்ற அடையாளமும், 'இந்தியர்' என்ற அடையாளமும் எந்த அளவுக்கு வேர் பிடித்துள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும். 

'தமிழ், தமிழ் உணர்வு' என்பன‌, சுயநல பொது வியாபார மூலதனம் ஆனதன் விளைவாக, ஆங்கில வழிக்கல்வியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டுச் சூழலில் , அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள். இதனால் அம்மாணவர்களிடம், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை கேலிக்குள்ளாகி வருகிறதா? அம்மாணவர்களில் பெரும்பாலோர், தமிழில் சரியாக படிக்கத் தெரியாமல், 'தமிழ் வேரற்ற'வர்களாகி வருவதும், அதே நேரத்தில்,  அவர்களிடையே பிரமிக்கும் வகையில், (கிரிக்கெட், வெளிநாடு வேலை, etc மூலம்) 'இந்தியர்' என்ற அடையாளம் ‘வேர் வலிமை’ பெற்று வருவதும் உண்மையா? என்பது ஆய்விற்குரியதாகும். அது உண்மையெனில், மேலே குறிப்பிட்ட ஜெயலலிதா பற்றாளர்களும், அந்த அடையாளத்தில் பயணிக்க இருப்பது, வரலாற்றில் தவிர்க்க இயலாத போக்கு என்று நிரூபணமாகும். 

"'தமது பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது சொந்த/குடும்ப வாழ்விற்கும் தொடர்பற்று வாழும் திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் ஒதுங்கினால் தான், தமிழ் வேர் பிழைக்கும்." என்பதை மேலே பார்த்தோம். தமிழ்நாட்டில் 'தமிழ்,தமிழுணர்வு, தமிழர்கள்' என்று பேசிக்கொண்டு, மனச்சாட்சியை அடகு வைத்து,'பிழைப்பு வேத'ப் போக்கில், தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்த/வைத்துக் கொண்டிருக்கும் (வெளிநாடு/வெளிமாநில‌ வாழ் தமிழர்களுக்கு வேறு வழியில்லை)  கட்சித் தலைவர்கள் யாவரும், தமிழ் வேரை அழிக்கும் வேர்க்கொல்லிகளாவர். 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூலாசிரியர், அந்நூலை எழுதியதன் விளைவாக, சாகும் வரை தனது நண்பர்கள் பாதுகாப்பிலேயே உயிர் வாழ்ந்தார். அந்த அளவுக்கு, தமிழானது, தி.மு.க வின் சுயநல அரசியலில் சிக்கியுள்ளது. (refer post dt. November 27, 2014; ‘தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய  திருக்குறள் ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html ) அந்த 'தமிழ் வேர்க்கொல்லி' போக்கில், அடிவருடி பிழைத்த தமிழறிஞர்கள் யார்? அவர்களின் 'புலமையை'(?) பறை சாற்றும் படைப்புகள் யாவை? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழ் வேர்க்கொல்லி நோய் செல்வாக்கில் சிக்கிய தமிழர்களின், குடும்பம், அரசியல், மதம் உள்ளிட்ட அமைப்புகளில், தவறுகள் தடையின்றி  சமூக புற்று நோய் போல் பரவும், என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. December 9, 2014;’ திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:  சமூக செயல்நெறி மதகுகள் (Social Functional Checks)’)

உலக வரலாற்றில், ஒரு மொழியை, ‘பிழைப்பு வேத', 'கட்சி அரசியல் சிறை’யில் சிக்க வைத்து, அதன் வேரை அழிக்கும் முயற்சியானது, தமிழ்நாட்டில் மட்டுமே நடந்துள்ளதா? தமிழ் வேர்க்கொல்லிகளுக்கு சாதகமான உணர்ச்சிபூர்வ சூழலில், அதனை அறிவுபூர்வமாக விவாதிக்க வாய்ப்புண்டா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழர்களின் அடையாளச்சிதைவின் அடிப்படையில், அரசியல் நீக்கம்(depoliticize)  எவ்வாறு நடந்தது? அந்த போக்கில், தமிழானது, ‘பிழைப்பு வேத', 'கட்சி அரசியல் சிறை’யில் சிக்கி, எவ்வாறு தமிழ் வேர்க்கொல்லி நோய்க்குள்ளானது? என்ற விவாதத்திற்கு இடமில்லாத சூழலில், தமிழ்வழி அரசுப் பள்ளிகளின் மரணப்பயணத்தை தடுத்து, தி.மு.கவின் சுயநல அரசியலில் சிக்கி சீரழியும்,  தமிழை, அந்த‌ 'சிறை’யிலிருந்து விடுவித்து, தமிழ் வேரை மீட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வரலாற்றில் நிலையான புகழ் பெற முடியும். எனவே அபரீதமான மக்கள் செல்வாக்குடன் ஆட்சியில் உள்ள,‌  தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மனது வைத்தால் மட்டுமே, தமிழ் வேரானது, தனது மரணப்படுக்கையிலிருந்து, மீண்டு, உயிர் வாழ வாய்ப்புள்ளது. 

குறிப்பு: 
விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று உலக ஆய்வுகள் எல்லாம் உணர்த்துகின்றன. சான்றுகளாக;

1. www.ccsenet.org/ass - Asian Social Science Vol. 7, No. 12; December 2011- Primary School Pupils’ Perception of the Efficacy of Mother Tongue Education in Ibadan Metropolis by Dr. David O. Fakeye;
2. The findings of a comprehensive research review carried out for the World Bank: Dutcher, N. in collaboration with Tucker, G.R. (1997): The Use of First and Second Languages in Education: A Review of Educational Experience , Washington D.C., World Bank;
3. Education for All: Policy Lessons From High-Achieving Countries: UNICEF Staff Working Papers , Mehrotra, S. (1998), New York, Unicef;
4. Expanding Educational Opportunity in Linguistically Diverse Societies- Dutcher, N: , Center for Applied Linguistics, Washington DC.(2001);
5.  Education in a multilingual world  - Published in 2003 by UNESCO http://unesdoc.unesco.org/images/0015/001556/155642E.pdf
From: ‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’ post dt. October 24, 2013; http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html;  
 
Also visit: ‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts (16); Thanks to TN CM, there is now hope  to arrest the suicides and the decay to the Tamil;’post dt. September 20, 2013; http://tamilsdirection.blogspot.in/2013_09_01_archive.html;

No comments:

Post a Comment