Monday, February 16, 2015


டெல்லி  ‘ஆம் ஆத்மி கட்சி' வெற்றியும், தமிழ்நாட்டின் அரசியல் 'கணக்குகளும்



டெல்லி சட்ட மன்ற தேர்தல், புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல்கள் போன்றவையெல்லாம், சென்னை மாநகராட்சி தேர்தல் போன்றவையே. டெல்லி நகராட்சி பா..விடம் இருப்பதால், ஊழல் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளில்(local issues)  டெல்லி பா.. ஆட்சியின் 'சாதனை'(?)யும், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு துணை புரிந்திருந்தால் வியப்பில்லை. உள்ளுர் பிரச்சினைகளில்(Local issues)  ஊழல் ஒழிப்பு, மக்கள் நலன் பற்றிய அக்கறையின்றி, மோடி அலையில் பயணிப்பதில் உள்ள ஆபத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது , டெல்லி தேர்தல் முடிவுகள்.


டெல்லி சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால்  கீழ்வரும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, ஆட்சியைப் பிடித்திருக்கிறார். 500 புதிய பள்ளிகள்;20 புதிய கல்லூரிகள்;2 லட்சம் பொதுக் கழிவறைகள்;டெல்லி முழுவதும் வீ.ஃபி(WiFi) இணைய வசதி; இலவச குடிநீர்; 50% கழிவில் மின்சாரம்,டெல்லி முழுவதும் 15 லட்சம் சி.சி.டி.வி கேமராக்கள்; இன்னும் பல.


தமிழக அரசின் அதிகாரம் மற்றும் நிதி வரைஎல்லைகள்{limitations) அறிந்தவர்கள் பார்வையில், 1967 தேர்தலில் (பகத்வச்சலம் ஆட்சியில்,ரேசன் அரிசி ஒழுங்காகக் கிடைக்காமல், மக்கள் அவதியுற்ற போது)-  தி.மு.கவின் 'ரூபாய்க்கு 3 படி அரிசி' வாக்குறுதியும், டெல்லி அரசின் அமைப்பின் அதிகாரம் மற்றும் நிதிநிலை வரை எல்லைகள் அறிந்தவர்கள் பார்வையில், மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளும்,- இரண்டுமே -  செயல்சாத்தியமற்றவை என்பது தெரியும்.


1967 தேர்தலில் தி.மு. ஆட்சியைப் பிடிக்க, கட்சியினரும், ஆதரவாளர்களும் தமது சொந்த பணத்தையும், உழைப்பையும் செலவழித்தது போல், ஆம் ஆத்மி கட்சியினரும், ஆதரவாளர்களும் தமது சொந்த பணத்தையும், உழைப்பையும் செலவழித்து, அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.


1967 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளின் நிலையைப் பலகீனமாக்கின. உள்ளுர் மக்களுடனும் உள்ளூர் பிரச்சினைகளுடனும் தொடர்பற்று, அவ்வப்போது மீடியா பலத்துடன் 'தலை தூக்கும்' பிரச்சினைகளில் 'வெளிச்சம்' போட்டு, 'சந்தர்ப்ப வாத கூட்டில்' பயணிக்கும் தமிழகக் கட்சிகள் 2016 சட்டசபை தேர்தலுக்குப்பின் உதிர்ந்து, சுவடின்றி மறைந்து விடுவார்களா? என்ற கேள்வியை, டெல்லி தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன.


அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் என்.ஜி. அமைப்புகள் பற்றிய மக்களின் 'புரிதல்', டெல்லி மக்களிடம் இல்லாததும், ஆம் ஆத்மி கட்சியின் 'சுனாமி' வெற்றிக்குக் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


1980களின் பிற்பகுதியில் விசாகப்பட்டிணத்தில் 'அகில இந்திய சாதி ஒழிப்பு மாநாட்டில்' கலந்துகொண்ட எனக்கு, உலகப்பொது மொழியாகும் நோக்கில் உருவான 'எஸ்பிராண்டோ' (Esperanto ) என்ற செயற்கை மொழி பற்றி தெரிய வந்தது. .( http://en.wikipedia.org/wiki/Esperanto)


அது தொடர்பான புத்தகங்களுடன் தஞ்சாவூர் திரும்பிய நான், அம்மொழியை 'இலவசமாக' கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து, நாமும் அதன் மூலம் அம்மொழியில் புலமை பெறலாம் என்ற நோக்கில், கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்று, மாணவர்களுக்கு சில வகுப்புகள் எடுத்தேன். எனக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்து, அதற்கு கணக்கு காட்ட இது போன்று செய்வதாக மாணவர்கள் மத்தியில் பேச்சு எழவே, எனது முயற்சி 'கருச்சிதைவுக்கு' உள்ளானது.


பின்னர்  1990களின் பிற்பகுதியில், 'செல்வாக்குள்ள' ஒரு பணக்காரர் தமது வைப்பாட்டியின்(concubine) தூண்டுதலில்,  கிராமத்தில் குடும்ப வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மனைவிக்கு 'நம்ப முடியாத' கொடுமைகள் செய்தார். அந்த வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிப்பு, குடி நீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, தொலைபேசி துண்டிப்பு போன்றவை அதில் அடங்கும். ஏற்கனவே பெரியார் இயக்கத்தில் 'தீவிரமாக' பங்காற்றி, பி.யு.சி.எல்(P.U.C.L) உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் முன்னேடுத்த பிரச்சாரங்கள், போராட்டங்களில் பங்கேற்பு, அனுபவமுள்ள நான், அந்த வயதான பெண்ணுக்கு உதவுவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள‌, வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும்,  மனித உரிமை  'புகழ்' பெற்ற  அமைப்பாளரின் பார்வைக்கு அத்தகவல்களை கொரியரில் அனுப்பி, தொலைபேசியிலும் முயற்சித்து, அவருடன் 'மனித உரிமைப் பணியாற்றுபவர் மூலமும் முயற்சித்து, சந்திக்க முடியவில்லை. அதனை அந்த கிராமத்தில் அந்த வயதான பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தபோது, என்னை அவர்கள் கேலி செய்தார்கள். கொடுமைகள் புரிந்து வந்த அந்த கணவனுக்கு 'மிக நெருக்கமான பணக்கார' சமூக வட்டத்தில் உள்ள, அந்த 'மனித உரிமை செல்வாக்கு' நபரை, 'சமூகப் புரிதல்' உள்ள எவரும் அணுகுவார்களா? அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் 'என்.ஜி.ஓக்கள்' (NGOs) பற்றியும், அவர்கள் 'மனித உரிமை/சேவைகள்' மூலம் எவ்வாறு செல்வத்திலும், செல்வாக்கிலும் வளமாகி வருகிறார்கள் என்பது பற்றியும், 1980களிருந்தே , கிராம மக்களுக்கும், கிராமங்களிருந்து வந்து படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதாவது சுயலாப நோக்கின்றி சமூக சேவை செய்பவர்களையும், 'சந்தேகக் கண்' கொண்டு பார்க்கும் அளவுக்கு, 'என்.ஜி.ஓ சமூக சேவை வியாபாரம்' தமிழ்நாட்டில் 'சாதனை' புரிந்துள்ளது. டெல்லி மக்களிடையே அந்த புரிதல் இருக்கிறதா? என்பது ஆய்விற்குரியதாகும்.


ஒரு பரிசோதனை முயற்சியாக, அந்த பிரச்சினையை தேச, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பார்வைக்கும் கொண்டு சென்றேன். http://www.driftline.org/cgi-bin/archive/archive_msg.cgi?file=spoon-archives/third-world-women.archive/third-world-women_2002/third-world-women.0205&msgnum=1&start=1&end=442


வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் மனித உரிமை என்.ஜி.ஓக்களுக்கு உள்மறை ‘Subterranean’  செயல்திட்டம் இருப்பதே, மேற்குறிப்பிட்ட பாரபட்ச மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளுக்கு காரணமா?” என்ற கேள்வி எழ, அது போன்ற அனுபவங்களே காரணமாகும். (Refer post. February 8, 2015;’ மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்; 'மாதொரு பாகன்'  எழுப்பும் கேள்விகள்’)

 குடும்ப உறவுகளை சீர்குலைத்து, சமூகத்தின் வெறுப்பிற்கும், புறக்கணிப்பிற்கும் உள்ளான நபர்கள்,  1967க்குப் பின், சமூகத்தில் 'செல்வம், செல்வாக்கு' மிக்க நபர்களாக வளர்ந்த போக்கும், வெளிநாட்டு நிதி உதவியில் ‘Subterranean’ உள்மறை செயல்திட்டத்தோடு என்.ஜி.ஓக்கள் வளர்ந்த போக்கும் 'விபத்தான ஒற்றுமையா (accidental coincidence) ? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாகும்.


அரவிந்த் கெஜ்ரிவாலின் 'வெளிநாட்டு/உள்நாட்டு என்.ஜி.ஓNGO' பின்பலம் பற்றி எழுந்துள்ள 'சர்ச்சைக்குரிய' தகவல்கள் ஆய்வுக்குரியவையாகும்.  (https://www.youtube.com/watch?v=1SD4tPpgWy8) வெளிநாட்டு மீடியாக்களில் ஆதாரங்களோடு வெளிவந்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் 'சர்ச்சைக்குரிய' நிதி பற்றி, மேலேக் குறிப்பிட்ட காணொளி வலைப்பின்னலில்(network) இடம் பெற்ற நபர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது விபத்தான ஒற்றுமையா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாகும். அந்த நபர்கள் எல்லாம் சமூக மேல்தட்டு (affluent) வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு, சராசரி மனிதர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் பங்களிப்பு வழங்க முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


மேலேக் குறிப்பிட்டவற்றைக் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டில் ஆதாயத் தொண்டர்கள் பலத்தில் பயணிக்கும் அரசியல் கட்சிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூட்டு சேர்ந்து, 2016 தமிழக சட்ட மன்ற தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் கனவு காண்பதாக, பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் தினமும், தமது பகுதி பொதுப் பிரச்சினைகளுக்காக, சாதாரணப் பொது மக்கள், குறிப்பாக பெண்கள், வீதியில் இறங்கி தாமாகவே போராடுவதும், 'மாணவர்களாக' உள்ள தமது பிள்ளைகளை அப்போராட்டங்களில் ஈடுபடுத்தாமல், தாமே போராடுவதும், பொது இடங்களில் திருடர்களைப் பிடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்து வருவதும் உணர்த்துகின்றன.” 'குறுக்கு வழியில்' 'அதீத' பணம் சம்பாதித்துள்ள, திராவிட மனநோய்க் கள்வர்களை நோக்கி, அவர்கள் கவனம் திரும்பி, 'அந்த' சொத்துக்களைப் பறிமுதல் செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும்  காலம் நெருங்கி வருவதையும் அவை உணர்த்துகின்றன.” (’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி”; http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )


மேலேக் குறிப்பிட்ட‌  போராட்டங்களில் முன்நின்று, பின் அதையே 'பேரமாக்கி' அரசியல் கட்சிகளுக்குள் நுழைந்து, 'வளமாகி' வருபவர்கள் காரணமாக, தமிழக அரசியல் கட்சிகள் 'வேரற்ற' கட்சிகளாக, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில் பயணிக்கும் நிலையில் உள்ளார்கள். போராட்டங்கள் வலுவடைந்து மீடியாக்களின் வெளிச்சம் படும்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் 'வெளிச்சம்' போடுவதும், மீடியாக்களின் வெளிச்சம் குறைந்தவுடன் அவர்களும் காணாமல் போய்விடுவதுமான நகைச் சுவை காட்சிகளும் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன.


தமிழ்நாட்டில் தினமும் ஆங்கங்கே அடிப்படை வசதிகளுக்காகவும், மோசடி பேர்வழிகளுக்கு எதிராகவும் மக்கள் தாமே போராடி வருவதிலிருந்து, ஒதுங்கி நின்று, 'குறுக்கு வழிகளில்', மற்ற கட்சிகளின் ' ஆதாயத் தலைவர்கள்/தொண்டர்களை' தம் பக்கம் இழுத்து, பயணித்து ஆட்சியைப் பிடிப்பது இனி நடக்க வாய்ப்பில்லை; பா..கவாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், என்பதும் என் கணிப்பாகும். (refer post dt. December 30, 2014;’ தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்திராவிடச் சிக்கல்கள்)
 
தமிழ்நாட்டு மக்களிடம் வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்.ஜி.ஒக்கள் பற்றி என்ன கருத்து இருக்கிறது? டெல்லியில்  சாதாரண மக்களின் பிரச்சினைகளிலும், போராட்டங்களிலும் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் பங்கேற்றது, எந்த அளவுக்கு தேர்தல் வெற்றிக்கு உதவியது? போன்ற கேள்விகள் பற்றிய கவலையின்றி, தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியில் 'அதிகார கனவுகளுடன்' சேருபவர்களுக்கும், அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியில் அமரும் கனவுகளுடன் உள்ள கட்சிகளுக்கும், 2016 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தால் வியப்பில்லை. டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள 'அதிர்ச்சியை’ விட, கூடுதல் அதிர்ச்சியை தமிழ்நாடு ஏற்படுத்தினாலும் வியப்பில்லை.

'உலகம் எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் 'புத்திசாலித்தனமாக' பிழைப்போம்' என்று 'வசதியை' அதிகரித்து வாழும் மக்கள் சதவீதம் 1967க்குப்பின் அபரீதமாக வளர்ந்ததா? அதனால் 'சமூகப் பொறுப்பு' பலகீனமாகி, 'லஞ்சம்' வளர்ந்த வேகத்தில், துயரங்களில் மூழ்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததா? வெளிநாட்டு நிதி உதவி பெற, அத்துயரங்களில் மரணவாயிலில் இருப்பவர்களை 'மூலதனமாக்கி, 'பிணம் தின்னும் கழுகுகளாக' வளர்ந்த என்.ஜி.ஓக்கள் யார் யார்? அந்த செயல்வினையில்(processing) அவர்களின் 'செல்வம், செல்வாக்கு' எந்த அளவுக்கு வளர்ந்தது? அந்த செயல்வினையின் ஊடே, அவர்கள் உறவு கொண்டிருந்த 'திராவிட அரசியல் கள்வர்கள்' யார்? யார்? போன்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை? அடுத்த 5 வருடங்களுக்குள் ‘ஆம் ஆத்மி கட்சி’ பிணம் தின்னி கழுகுகளா? உண்மையான சமுக சேவகர்களா? என்பது அவர்களின் டெல்லி ஆட்சி மூலம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

No comments:

Post a Comment